துவாஸ் நோக்கிச் செல்லும் பான் தீவு விரைவுச் சாலையில் (PIE) லாரி தீப்பிடித்து எரிந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இங் நியோ அவென்யூ (Eng Neo Avenue) வெளியேறும் இடத்திற்கு முன்னதாக நேற்று மே 7 ஆம் தேதி இரவு 7:45 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம்… சிங்கப்பூர் வெளியிட்ட பயண ஆலோசனை
இந்த தீ சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்தது.
இதில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும், மேலும் SCDF வீரர்கள் ஜெட் கருவி மூலம் நீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர்.
இது தொடர்பான காணொளி Singapore Road Vigilante பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது.
அதில் லாரியின் முன்பகுதி தீப்பிடித்து எரிவதையும், தீயில் இருந்து பிரம்மாண்ட கரும்புகை வெளியேறுவதையும் காண முடிகிறது.
துவாஸ் நோக்கிச் செல்லும் PIE சாலையில் விபத்து நடந்ததாகவும், இதன் காரணமாக ஸ்டீவன்ஸ் ரோடு (Stevens Road) வெளியேறும் பகுதி வரை போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) பொதுமக்களை எச்சரித்தது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Photo: SGRV/Facebook

