துவாஸில் லாரி கவிழ்ந்த விபத்தில், பின்னால் பயணித்த ஊழியர்கள் 6 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
நேற்று ஜூன் 16 ஆம் தேதி காலை சுமார் 7.20 மணியளவில் நடந்த விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் டோட்டோ (TOTO) டிரா: S$10 மில்லியன் ஜாக்பாட் பரிசு – ஒரே வெற்றி! ஓகோன்னு வாழ்க..!
துவாஸ் சவுத் அவென்யூ 5 மற்றும் துவாஸ் சவுத் அவென்யூ 10 சந்திப்புக்கு அருகில், துவாஸ் கிரசண்ட் MRT நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி சறுக்கியதாக நம்பப்படுகிறது.
SGRV இணைய பக்கத்தில் பதிவேற்றப்பட்ட விபத்தின் காணொளியில், அந்த சந்திப்புக்குப் அருகே சாம்பல் நிற லாரி கவிழ்ந்து பக்கவாட்டில் கிடப்பதைக் காணலாம்.
36 முதல் 50 வயதுக்குட்பட்ட ஆறு பேர் இங் தெங் போங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இரண்டு பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் அதனால் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக 33 வயதுமிக்க லாரி ஓட்டுநர் காவல்துறை விசாரணைகளுக்கு உதவி வருகிறார்.
வெளிநாட்டுப் பணிப்பெண் மீது இச்சை.. “அழுது ஊரை கூட்டிய பெண்” – சிங்கப்பூரருக்கு சிறை
Photo: SS from SG Road Vigilante /FB
The post துவாஸில் லாரி கவிழ்ந்து விபத்து (Video): ஊழியர்கள் 6 பேர் மருத்துவமனையில் அனுமதி appeared first on Tamil Daily Singapore.

