சிங்கப்பூருக்குள் புகையிலை பாக்கெட்டுகளை கடத்தும் முயற்சியை அதிகாரிகள் முறியடித்தனர்.
துவாஸ் சோதனைச் சாவடி வழியாக கடத்தப்படவிருந்த சுமார் 4,200க்கும் மேற்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை குடிநுழைவு & சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
லாரி மோதிய சம்பவம்… பைக் ஓட்டுநர் மரணம் – 49 வயது லாரி ஓட்டுநர் போலீஸ் விசாரணையில்…
மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியில் இருந்த மெத்தைகள், தலையணைகள் மற்றும் பிளாஸ்டிக் தாள் ரோல்கள் ஆகியவற்றில் அவைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக ICA பேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
இந்த சம்பவத்தில் 23 வயதான மலேசிய ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டார், மேலும் கூடுதல் விசாரணைக்காக இந்த வழக்கு சுகாதார அறிவியல் ஆணையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்திய கட்டுமான ஊழியருக்கு சிறை.. ஜன்னல் வழியே பெண்ணை கண்டு, படுக்கையறைக்குள் நுழைந்த ஊழியர்
புற்றுநோய் உண்டாக்கும் பொருட்களைக் கொண்ட புகையிலைகள் சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை, S$10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
லாட்டரி உள்ளிட்டவை மூலம் S$12.7 பில்லியன் வருவாய் ஈட்டி Singapore Pools சாதனை
PHOTO: Immigration and Checkpoints Authority
The post துவாஸில் மெத்தை, தலையணையில் புகையிலை.. வெளிநாட்டு ஓட்டுநர் கைது appeared first on Tamil Daily Singapore.