[ad_1]
Last Updated:
செப்டம்பர் 11 ஆம் தேதி தொடங்கும் இறுதிப் போட்டியில் தெற்கு மண்டல அணி மத்திய மண்டல அணியை எதிர்கொள்ளவுள்ளது
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் தெற்கு மண்டல அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதி சுற்றில் வடக்கு மண்டல அணியுடன் தெற்கு மண்டல அணி டிரா செய்த நிலையில் அதிக புள்ளிகள் அடிப்படையில் தெற்கு மண்டலம் இறுதிப் போட்டியை உறுதி செய்துள்ளது.
செப்டம்பர் 11 ஆம் தேதி தொடங்கும் இறுதிப் போட்டியில் தெற்கு மண்டல அணி மத்திய மண்டல அணியை எதிர்கொள்ளவுள்ளது. அரையிறுதி போட்டியின் முதல் இன்னிங்ஸில் தெற்கு மண்டல அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 536 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் நாராயணன் ஜெகதீசன் 197 ரன்களும், தனய் தியாக ராஜன் 58 ரன்களும், தேவ்தத் படிக்கல் 57 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய வடக்கு மண்டல அணியில் தொடக்க வீரர் சுபம் கஜுரியா 128 ரன்கள் எடுத்தார். நிஷாந்த் சாந்து 82 ரன்களும், ஆயுஷ் பதோனி 40 ரன்களும் சேர்க்க அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வடக்கு மண்டல அணி 361 ரன்கள் எடுத்தது.
September 07, 2025 5:37 PM IST