Last Updated:
துலீப் கோப்பை தொடரில் அரையிறுதி போட்டிகள் செப்டம்பர் 4 ஆம் தேதி தொடங்குகின்றன.
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் வடக்கு மற்றும் மத்திய மண்டல அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கு மண்டலம் இடையே நடைபெற்ற போட்டி டிராவில் முடிந்தது. ஆனால், முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்ததன் அடிப்படையில் வடக்கு மண்டல அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
அந்த அணியின் ஆயுஷ் பதோனி மிக அபாரமாக விளையாடி, 204 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது அவரது முதல் துலீப் டிராபி போட்டியாகும்.
வடக்கு மண்டல அணியின் கேப்டன் அன்கித் குமார் 198 ரன்கள் எடுத்து இரட்டைச் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அரையிறுதியில், வடக்கு மண்டலம் மற்றும் மேற்கு மண்டல அணிகள் மோதவுள்ளன.
இதேபோன்று மத்திய மண்டலத்திற்கும், வடகிழக்கு மண்டலத்திற்கும் இடையே நடைபெற்ற போட்டியில் மத்திய மண்டல அணி 678 ரன்கள் அதிகம் எடுத்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. சென்ட்ரல் சோன் அணியின் சுபம் ஷர்மா பொறுப்புடன் விளையாடி சதம் (122 ரன்கள்) அடித்தார். அரையிறுதியில், சென்ட்ரல் சோன் அணி சவுத் சோன் (South Zone) அணியுடன் மோத உள்ளது.
செப்டம்பர் 4-7: மேற்கு மண்டலம் vs வடக்கு மண்டலம்
செப்டம்பர் 4-7: தெற்கு மண்டலம் vs மத்திய மண்டலம்
August 31, 2025 5:09 PM IST


