ராஜினாமா முடிவு வாபஸ்
நேற்று (ஏப்ரல் 19), துரை வைகோ தனது முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்து, மல்லை சத்யாவின் செயல்பாடுகள் கட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலடியாக, மல்லை சத்யா கட்சியிலிருந்து வாக்கெடுப்பு மூலம் தன்னை நீக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால், இன்றைய கூட்டத்தில் வைகோவின் சமாதான முயற்சியால், துரை வைகோ தனது ராஜினாமா முடிவை திரும்பப் பெற்று, “மல்லை சத்யாவின் உறுதிமொழியை ஏற்று, நான் எனது முடிவை வாபஸ் பெறுகிறேன்,” என்று அறிவித்தார்.

