இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான மோதலில் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்த வெகு சில நாடுகளில் துருக்கியும் ஒன்று. ஆபரேஷன் சிந்தூரின் போது பயங்கரவாதிகளின் முகாம்களை இந்தியா தாக்கி அழித்ததற்கு துருக்கி வெளிப்படையாக கண்டனம் தெரிவித்தது. இதைப்போல் அஜர்பைஜானும் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்து வருகிறது. இந்தியா- பாகிஸ்தான் மோதலின் போது துருக்கி விமானப்படையின் சி-130 ஜெட் விமானம் பாகிஸ்தானுக்கு வந்தது. இதேப்போல் கடந்த வாரம் துருக்கியின் போர்க்கப்பல் ஒன்றும் கராச்சி துறைமுகத்திற்கு வந்தது..
கடந்த வியாழக்கிழமை இந்தியாவின் பல்வேறு நகரங்களைத் தாக்க பாகிஸ்தான் பயன்படுத்திய 300 – 400 டிரோன்கள் துருக்கி நாட்டைச் சேர்ந்தவவை என இந்திய ராணுவம் கூறியது. கடந்த பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் 5.2 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை துருக்கி நாட்டிற்கு இந்தியா ஏற்றுமதி செய்தது… இது இந்தியாவின் 437 பில்லியன் டாலர் ஏற்றுமதியில் வெறும் 1.5 சதவிகிதம் தான்.
இறக்குமதியை பொறுத்தவரை 2.84 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இந்தியா இறக்குமதி செய்ததது. இது இந்தியாவின் மொத்த இறக்குமதியான 720 பில்லியன் டாலர்களில் வெறும் 0.5 சதவிகிதம் மட்டுமே. கனிம எரிபொருள்கள், எண்ணெய், மின் சாதன பொருட்கள், ரசாயனம், மருத்துவ பொருட்கள், பிளாஸ்டிக், ரப்பர், பருத்தி, இரும்பு மற்றும் எஃகு ஆகியவற்றை துருக்கிக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது.
துருக்கியிலிருந்து மார்பிள், ஆப்பிள், தங்கம், காய்கறிகள், சிமெண்ட், கனிம எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை இந்தியா இறக்குமதி செய்கிறது. துருக்கி பாகிஸ்தானுக்கு உதவு புரிவதால், அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யவதை நிறுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக துருக்கியிலிருந்து வந்த ஆப்பிளை மும்பை வியாபாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர். பழ வியாபாரிகள் துருக்கி ஆப்பிள்களை இனி இறக்குமதி செய்வதில்லை என மும்பை பழ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்நாட்டிற்கு 1,200 முதல் 1,500 கோடி ரூபாய் வரை வர்த்தக பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. துருக்கியிலிருந்து மார்பில் இறக்குமதி செய்வதை நிறுத்த உதய்பூர் வியாபாரிகள் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். இந்தியா, ஆண்டுதோறும் சுமார் 14 முதல் 16 லட்சம் டன் மார்பிளை இறக்குமதி செய்கிறது, இதில் 70 சதவீதம் துருக்கியிலிருந்து வருகிறது. இதனால் துருக்கிக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதேப்போல் துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகளுக்கு செல்வதும் கணிசமாக குறைந்துள்ளது. இந்த இரு நாடுகளுக்குமான முன்பதிவுகள் 60 சதவிகிதம் குறைந்துள்ளன. அதே நேரத்தில் பயணங்களை ரத்து செய்வது 250 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அஜர்பைஜான் மற்றும் துருக்கிக்கான நாடுகளுக்கான அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என சுற்றுலா நிறுவனங்கள் மக்களை கேட்டுக்கொண்டுள்ளன.
துருக்கில் தற்போது 3 ஆயிரம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர்… இதில் 200 மாணவர்களும் அடங்குவர்.. அஜர்பைஜானில் ஆயிரத்து 500 இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இதனிடையே, துருக்கியின் இனோனு (Inonu) பல்கலைகழகத்துடன் டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைகழகம் மேற்கொண்டிருந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.. தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக ஜவர்ஹலால் நேரு பல்கலைகழகம் குறிப்பிட்டுள்ளது..

