Last Updated:
சாலைகளுக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கும் அருகில் இந்தக் குழிகள் தோன்றுவதால், அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது.
துருக்கி நாட்டில் வறட்சி காரணமாக புதை குழிகள் உருவாகியுள்ளன. இவை விவசாய நிலங்களை அழித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கோன்யா பகுதியில்தான் இந்த புதை குழிகள் ஏற்பட்டுள்ளன. துருக்கியின் “தானியக் களஞ்சியம்” என்று அழைக்கப்படும் கோன்யா சமவெளியில், திடீரெனப் புதைகுழிகள் தோன்றுவதற்கு முக்கியக் காரணம் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துபோனதே ஆகும் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
இப்பகுதியில் நீண்ட காலமாக நிலவும் தீவிர வறட்சியால் நிலத்தடி நீர் நிரப்பப்படுவது வெகுவாகக் குறைந்துவிட்டது. கோன்யா சமவெளியில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாயப் பாசனத் தேவைக்காக ஆயிரக்கணக்கான சட்டபூர்வமான மற்றும் சட்டவிரோதமான கிணறுகள் மூலம் அதிக அளவு நிலத்தடி நீரை உறிஞ்சி வெளியேற்றுகின்றனர்.
இதனால் வறட்சி மற்றும் அதிகப்படியான நீர் எடுப்பு காரணமாக புதை குழிகள் ஏற்பட்டுள்ளன. திடீரெனத் தோன்றும் இந்தக் குழிகள், கோதுமை விளையும் முக்கியமான விவசாய நிலங்களை விழுங்கி விடுகின்றன. சில குழிகள் 100 அடிக்கு மேல் அகலமாகவும், 160 அடிக்கு மேல் ஆழமாகவும் இருக்கின்றன.
வயல்களில் மட்டுமல்லாமல், சாலைகளுக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கும் அருகில் இந்தக் குழிகள் தோன்றுவதால், அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது.
December 14, 2025 2:29 PM IST
துருக்கி நாட்டில் வறட்சியால் உருவான புதை குழிகள்.. விவசாயம் அழிக்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி


