கிழக்கு துருக்கியில் சனிக்கிழமையன்று 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மற்றும் அவசரகால மேலாண்மை ஆணையம் (AFAD) தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை சுமார் 6:20 மணியளவில் மலாத்யா (Malatya) மாகாணத்தின் பட்டல்காசி மாவட்டத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த அதிர்வுகள் மலாத்யா, எலாசிக், அதியமான், துன்செலி மற்றும் ஷான்லியுர்ஃபா ஆகிய அண்டை மாகாணங்களிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிப்புகள்
தற்போதைய நிலவரப்படி எந்தவொரு மோசமான சூழ்நிலையோ அல்லது பாதிப்புகளோ ஏற்பட்டதாக அறிக்கைகள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது.

எனினும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவரம் குறித்த நேரடி கள ஆய்வு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உலகின் மிக அதிகமான நில அதிர்வு அபாயம் கொண்ட நாடுகளில் ஒன்றாக விளங்கும் துருக்கியில், ஆண்டுக்கு ஒரு முறையாவது 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

