• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

துப்புரவு தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்.. குப்பை மேடாக காட்சியளிக்கும் பிரிட்டனின் பெரிய நகரம்.. காரணம் என்ன?

GenevaTimes by GenevaTimes
April 2, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
துப்புரவு தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்.. குப்பை மேடாக காட்சியளிக்கும் பிரிட்டனின் பெரிய நகரம்.. காரணம் என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 02, 2025 6:43 PM IST

பர்மிங்காம் கவுன்சிலால் இந்த சர்ச்சையை எளிதில் தீர்க்க முடியும். ஆனால் அதற்கு பதிலாக பதவி பறிப்பு மற்றும் ஊதியக் குறைப்பு அகியவற்றை திணிப்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது

News18News18
News18

துப்புரவுப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, பிரிட்டனின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்காமின் சாலையோரத்தில் 17,000 டன்களுக்கும் அதிகமான குப்பைகள் சுத்தப்படுத்தாமல் குவிந்துள்ளது. இதனால் நகரம் முழுவதும் உள்ள குப்பைத் தொட்டிகளில் குப்பைகள் நிரம்பி வழிகின்றன.

“நாங்கள் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டியிருப்பது வருந்தத்தக்கது என்றாலும் பர்மிங்காம் முழுவதும் உள்ள சமூகங்களுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் துயரத்தை ஏற்படுத்தும் ஒரு சூழ்நிலையை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது” என்று பர்மிங்காம் நகர சபையின் தலைவர் ஜான் காட்டன் கூறியிருக்கிறார். இந்த சர்ச்சை டிசம்பர் 2024 -ல் தொடங்கியது. ஊதியக் குறைப்பு, கூடுதல் நேர வேலைகளுக்குத் தடை மற்றும் கவுன்சிலால் கழிவு சேகரிப்புப் பணியை நீக்குதல் ஆகியவற்றை எதிர்த்து 2025-ம் ஆண்டு குப்பை சேகரிப்பாளர்கள் வேலைநிறுத்தம் செய்வார்கள் என்று வர்த்தகக் குழுவான யுனைட் தி யூனியன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மார்ச் 28 அன்று, “அனைத்து தொழிலாளர்களுக்கும் அதே ஊதியத்தில் மாற்று வேலைவாய்ப்பு, ஓட்டுநர் பயிற்சி அல்லது தன்னார்வ பணிநீக்கம் வழங்கப்பட்டுள்ளது” என்று பர்மிங்காம் நகரம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

“பர்மிங்காம் கவுன்சிலால் இந்த சர்ச்சையை எளிதில் தீர்க்க முடியும். ஆனால் அதற்கு பதிலாக பதவி பறிப்பு மற்றும் ஊதியக் குறைப்பு அகியவற்றை திணிப்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது” என யுனைட் தி யூனியனின் செயலாளர் ஷரோன் கிரஹாம் திங்களன்று கூறினார்.

இந்த சர்ச்சை தொடங்கியதிலிருந்து குப்பைகளை அகற்றுவதற்கு நகர கவுன்சில் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்தத் தொடங்கியதைத் தொடர்ந்து, தொழிற்சங்க உறுப்பினர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை நீட்டிக்க பல முறை வாக்களித்துள்ளதோடு ஒப்பந்ததாரர்களை வேலை செய்யவிடாமல் மறியல் செய்யும் தொழிலாளர்கள் தடுத்தனர். “எங்கள் கிடங்குகளை தினமும் மறியல் செய்பவர்கள் முற்றுகையிடுவதால், குடியிருப்பாளர்களிடமிருந்து கழிவுகளை சேகரிக்க எங்கள் வாகனங்களை வெளியே எடுக்க முடியவில்லை” என்று திங்களன்று நகர சபை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

சமூகதுறை அமைச்சர் ஜிம் மெக்மஹோன் திங்களன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், பிரிட்டிஷ் அரசாங்கம் வேலைநிறுத்தம் குறித்து அறிந்திருப்பதாகக் கூறினார். “உள்ளூர் பகுதிகளுக்கு ஆதரவு தேவைப்படும் பிரச்சினைகளை அதிகரிப்பதற்கான நன்கு நிறுவப்பட்ட ஏற்பாடுகள் உள்ளன. மேலும் அரசாங்கம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது” என்று மெக்மஹோன் கூறியதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“பர்மிங்காமில் உள்ள உள்ளூர் தலைவர்கள் தங்களுக்கு இருக்கும் வசதிகளை கொண்டு இந்தப் பிரச்சினைகளைச் சமாளிப்பது கடினம் என உணர்ந்தால், அவர்கள் தேசிய ஆதரவைக் கோரலாம். நிச்சயமாக இதுபோன்ற எந்தவொரு கோரிக்கைக்கும் பதிலளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று மெக்மஹோன் மேலும் கூறினார்.

First Published :

April 02, 2025 6:43 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

துப்புரவு தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்.. குப்பை மேடாக காட்சியளிக்கும் பிரிட்டனின் பெரிய நகரம்.. காரணம் என்ன?

Read More

Previous Post

EPFO: பிஃஎப் பயனாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்… வெளியான செம அறிவிப்பு!

Next Post

கோர விபத்துக்களை குறைக்க அரசாங்கம் என்ன செய்கிறது? – Malaysiakini

Next Post
கோர விபத்துக்களை குறைக்க அரசாங்கம் என்ன செய்கிறது? – Malaysiakini

கோர விபத்துக்களை குறைக்க அரசாங்கம் என்ன செய்கிறது? – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin