Last Updated:
துபாய் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டு, புகை வெளியேறுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
துபாய் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று துபாய்ம். வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக சில நாட்களுக்கு முன்னர் அந்த விமான நிலையத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்டன. அதன் பின்னர் சேவை படிபடியாக தொடங்கப்பட்டது. இந்நிலையில், அந்த விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டு, புகை வெளியேறுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
ஆனால் அந்த வீடியோக்கள் போலியானவை என துபாய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஏவுகணை தாக்குதலை வெற்றிகரமாக வழிமறித்து தடுத்த போது, அதில் ஒரு சிறு பகுதி விமான நிலையத்தின் மீது விழுந்ததாகவும், இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 2 முதல் 5ஆம் தேதி வரை 84 மணி நேரங்களில் துபாய் விமான நிலையத்தில் ஆயிரத்து 140 விமானங்களுக்கு மேல் இயக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
80 நாடுகளுக்கு விமான சேவை வழங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் போலி செய்திகளை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


