[ad_1]
துபாயில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வாழ்க்கையைப் பற்றி பகிர்ந்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அதிக சம்பளம் இருந்தும், துபாயில் மகிழ்ச்சியாக இல்லை என அவர் கூறியிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
துபாயில் வசிக்கும் சீமா என்கிற இந்தியப் பெண், அதிக சம்பளம் இருந்தும் அங்குள்ள வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை எனக் கூறிய வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்த நிலையில், அந்த வீடியோ தற்போது வைரலாகி பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. “ரூ.18,000 சம்பளத்தில் பெங்களூரு வாழ்க்கையே சிறந்தது” என்கிற அவரது கருத்து, பலரின் உள்ளுணர்வையும் வெளிக்கொணர்கிறது.
இன்ஸ்டாகிராம் தளத்தில் சீமா என்கிற பெயரில் பகிரப்பட்டு வைரலான வீடியோவில், அந்தப் பெண், 5 ஆண்டுகளுக்கு முன் பெங்களூருவில் ரூ.18,000 சம்பளத்துடன், தங்கும் விடுதியில் தான் வசித்ததையும், அப்போது நண்பர்களுடன் பொழுதுபோக்கும், ஷாப்பிங், கிளப்புகளில் செலவிடும் நேரம் கிடைத்ததையும் நினைவுகூர்கிறார். அதே சமயம், தற்போது துபாயில் அதிகம் சம்பாதித்தாலும், மகிழ்ச்சி குறைந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அதாவது, “ரூ.18,000 சம்பளத்தில் இருந்த பெங்களூரு வாழ்க்கையே உண்மையில் சிறந்தது” என்று சீமா குறிப்பிட்டார்.
“வாழ்க்கை எனக்கு என்ன கொடுத்ததோ, அதைப் பற்றி தான் நான் இங்கே பேசுகிறேன்” என்று சீமா தனது பதிவில் எழுதியுள்ளார். ஒரு நாள் முன் பகிரப்பட்ட இந்த வீடியோ, ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றதுடன் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
நெட்டிசன்கள் பலரும் சீமாவின் உணர்வை “தங்களது வாழ்க்கைக்கும் இது ஒத்துப்போகிறது” என்று தெரிவித்துள்ளனர். அதில் ஒரு நபர், “துபாய் நல்ல வாழ்க்கையை தான் தருகிறது, ஆனாலும் கடவுளை நம்பி ஜெபிக்க மறக்காதீர்கள்.” என்று ஒருவர் குறிப்பிட்டார்.
மற்றொரு நபர், “அது 5 ஆண்டுகளுக்கு முன், நீங்கள் இளமையாக இருந்த காலம். தற்போது வாழ்க்கை நகர்ந்து கொண்டே இருக்கிறது” என்பதை நினைவூட்டினார். இன்னொருவர், “இப்போது விலை உயர்வை பார்த்தீர்களா? ரூ.18,000 சம்பளம் என்பது இங்கே போதாது” என்று தற்போதைய நிலையை அவருக்கு நினைவுப்படுத்தினார்.
September 10, 2025 10:05 PM IST