Last Updated:
இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ஈரான், துபாய், அபுதாபி மக்கள் வெளியேற எச்சரிக்கை; பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் பதற்றம் அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதலை தொடர்ந்து பஹ்ரைன், கத்தார் மீது தாக்குதல் நடத்திய ஈரான் துபாய், அபுதாபியை விட்டு மக்கள் வெளியேறுங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது உலக நாடுகள் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.
அணு ஆயுதங்கள் தயாரிப்பு தொடர்பான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்க ஈரானுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. ஏற்கனவே ஈரான் தங்களது அணு சக்தி மற்றும் ஏவுகணை திட்டங்களை கைவிட வேண்டும் என்று கூறி கடந்த ஜூன் மாதத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. 12 நாட்களுக்கு இந்த தாக்குதல் தொடர்ந்தது. இரு நாடுகளும் மாறி மாறி வான்வழி தாக்குதல் நடத்தின. இந்நிலையில் தற்போது டெஹ்ரான் மீது அமெரிக்க மற்றும் ஈரான் இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரான் உச்ச தலைவர் அயோதல்லாஹ் அலி கமினேனியின் அலுவலகம் அருகிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தெஹ்ரானில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைந்ததாக கூறப்படுகிறது. ஈரான் அதிபர் மாளிகை உட்பட கிழக்கு மற்றும் மேற்கு தெஹ்ரானில் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து தங்கள் வான்பகுதியை ஈரான் மூடியது. தங்கள் நாட்டின் மீதான அச்சுறுத்தல்களை தவிர்க்கும் வகையில் முன்கூட்டியே இந்த தாக்குதலை நடத்தி உள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கேட்ஸ் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதலையடுத்து இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஈரான் மீண்டும் அணு ஆயுத தயாரிப்பை தொடங்குவதில் தீவிரம் கட்டியதால், அதனால் ஏற்படும் அச்சுறுத்தல்களை தவிர்க்கும் வகையில் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இஸ்ரேல் – அமெரிக்கா தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இஸ்ரேல் மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாமென அறிவுறத்தப்பட்டுள்ளது. அதேப்போன்று அமெரிக்கா கடற்படை தளங்களை குறிவைத்து வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ப ஹ்ரைன் மற்றும் கத்தாரி் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணைகளை ஈரான் தொடர்ந்து வீசி வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். துபாய் மற்றும் அபுதாபியில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்த சத்தம் தொடர்ந்து கேட்டு வருகிறது. துபாய் மற்றும் அபுதாபி மக்கள் வெளியேற ஈரான் எச்சரித்துளுத்தால் உலக நாடுகள் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. துபாய், கத்தார், அபுதாபி, பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் தங்களது வான்வழி பரப்புகளை மூடியுள்ளது.


