• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

துணை குடியரசுத் தலைவராகும் நிதிஷ் குமார்? பாஜக தலைவர்கள் எழுப்பும் குரலும்.. அரசியல் யூகங்களும்!

GenevaTimes by GenevaTimes
July 22, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
துணை குடியரசுத் தலைவராகும் நிதிஷ் குமார்? பாஜக தலைவர்கள் எழுப்பும் குரலும்.. அரசியல் யூகங்களும்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு நேற்று இரவு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். அந்தக் ராஜினாமா கடிதத்தில் உடல்நிலை காரணமாக ராஜினாமா செய்வதாகத் தெரிவித்திருக்கிறார்.

உடல் நலனுக்கு முக்கியத்துவம் தரவும், மருத்துவர்கள் அறிவுரை காரணமாகவும் ராஜினாமா செய்துள்ளதாகவும் ஜெகதீப் தன்கர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சரவைக் குழுவினருக்கும் ஜெகதீப் தன்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமா முடிவு குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ஜெகதீப் தன்கரின் உடல்நிலைக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம் என்றாலும், அவரது திடீர் முடிவுக்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருப்பதாகச் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கிய நிலையில், முதல் நாளே ஜெகதீப் தன்கர் ராஜினாமா முடிவை அறிவித்ததும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஜெகதீப் தன்கர் ராஜினாமாவைத் தொடர்ந்து, யார் அடுத்த இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் எனும் பேச்சுகள் பரவலாக எழுந்து வருகின்றன. இந்தச் சூழலில், பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரைக் குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கலாம் எனும் குரல்கள் எழத் துவங்கியுள்ளன. அதுவும் பாஜக தரப்பில் இருந்து இந்தக் குரல்கள் எழத் துவங்கியிருப்பது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

பிகார் மாநிலத்தின் பாஜக தலைவர்களில் ஒருவரும், மாநில அமைச்சருமான பிரேம் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “இதை கட்சிதான் முடிவு செய்கிறது. யார் துணை ஜனாதிபதியானாலும் அவர்கள் பொறுப்பில் இருப்பார்கள். பீகாரைச் சேர்ந்த ஒருவர் துணை ஜனாதிபதியானால் நான் மகிழ்ச்சியடைவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், பிகார் மாநிலத்தின் மற்றொரு பாஜக தலைவரும், அமைச்சருமான நீரஜ் குமார் சிங், “இது நல்ல விஷயம். அவர் (நிதிஷ் குமார்), துணைக் குடியரசுத் தலைவராக வந்தால் என்ன பிரச்சனை? எல்லோரும் அவரவர் வேலையைச் செய்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

பிகார் பாஜக தலைவர்கள் அந்தப் பதவியை பிகாரின் தற்போதைய முதல்வர் நிதிஷ் குமாருக்குக் கிடைக்கலாம் எனப் பேசி வருவது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: “1 மணி முதல் 4:30 மணி வரை நடந்தது என்ன?” – ஜெகதீப் தன்கர் ராஜினாமா.. ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட தகவல்!

இந்த ஆண்டு இறுதியில் பிகார் மாநிலத்திற்குச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. பிகார் மாநிலத்தில், ஆளும் ஜனதா தள் கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது. இதில் மீண்டும் ஜனதா தள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், நிதிஷ் குமாரைத் துணைக் குடியரசுத் தலைவராக்கிவிட்டு, மாநிலத்தின் முதல்வராக பாஜகவைச் சேர்ந்தவரை நியமித்து, மாநிலத்தைத் தனது நேரடி ஆளுமைக்குக் கீழ் கொண்டுவர பாஜக காய் நகர்த்துகிறது எனவும் பேச்சுகள் எழுந்துள்ளன.

பல்வேறு கோணங்கள், பல்வேறு அபிப்பிராயங்கள் இருந்தாலும், எவை எதற்காக நடந்தன. இனி என்ன நடக்கப்போகிறது என்பது உள்ளிட்ட அனைத்தும் இனி நிகழும் காலங்களில் நமக்குத் தெரியவரும்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 22, 2025 3:54 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

துணை குடியரசுத் தலைவராகும் நிதிஷ் குமார்? பாஜக தலைவர்கள் எழுப்பும் குரலும்.. அரசியல் யூகங்களும்!

Read More

Previous Post

Tamilmirror Online || மஹர பள்ளிவாசல் மீண்டும் திறக்கப்படாது: அமைச்சர் அதிரடி

Next Post

காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து நித்திஷ் குமார் ரெட்டி விலகல் | Nitish Kumar Reddy ruled out of England series due to injury

Next Post
காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து நித்திஷ் குமார் ரெட்டி விலகல் | Nitish Kumar Reddy ruled out of England series due to injury

காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து நித்திஷ் குமார் ரெட்டி விலகல் | Nitish Kumar Reddy ruled out of England series due to injury

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin