பான்-தீவு விரைவுச் சாலையில் (PIE) கனரக லாரியுடன் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 22 வயது ஆடவர் ஒருவரின் உயிர் பிரிந்தது.
நேற்று முன்தினம் ஆக.11 அன்று ஏற்பட்ட இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான அவர் சம்பவ இடத்திலேயே இறந்தது சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையால் (SCDF) உறுதி செய்யப்பட்டது.
சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு… புதுக்கோட்டையை சேர்ந்த இருவர் கைது
அவர் லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்டதை சமூக வலைத்தளங்களில் பரவிய புகைப்படம் வாயிலாக காண முடிந்தது.
சிங்கப்பூர் காவல் படையின் (SPF) செய்தித் தொடர்பாளர் இந்த விபத்தை உறுதிப்படுத்தினார்.
துவாஸ் சோதனைச் சாவடி வெளியேறும் பகுதிக்கு முன், துவாஸை நோக்கி செல்லும் பான்-தீவு விரைவுச் சாலையில் இந்த விபத்து நடந்தது.
இதில் 30 வயதுடைய கனரக லாரி ஓட்டுநர் ஒருவர் விசாரணைகளுக்கு உதவி வருவதாக SPF தெரிவித்துள்ளது.
விசாரணைகள் தொடர்கின்றன.
சிங்கப்பூரில் “கூலி” – எகிறும் எதிர்பார்ப்பு: திரைப்படம் வெளியாகும் திரையரங்குகள், நேரம் விவரம்!

