நாட்டின் பல மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இன்று (22) காலை 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (23) அதிகாலை 1.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களில் மேலும் வலுவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
பலத்த மின்னல்
நாட்டிற்கு அருகில் காணப்படும் குறைந்த அழுத்தப் பிரதேசம் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளதாகவும்இ அது படிப்படியாக மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் நாள் முழுவதும் மழையை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னருவ மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் உள்ள பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக, குறிப்பிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் தெரிவித்தது.
எனவே, மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

