Last Updated:
ரிவாபா ஜடேஜா, ஜடேஜா வெளிநாட்டு பயணங்களிலும் தீய பழக்கங்களுக்கு அடிமையாவதில்லை என கூறி, இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
வெளிநாட்டுப் பயணங்களின் போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் தீய பழக்கவழக்கங்களுக்கு ஆளாவதாகவும், ஆனால் தனது கணவர் அதில் விதிவிலக்கு என்றும் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில அமைச்சரான ரிவாபா ஜடேஜா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, தனது கணவர் லண்டன், துபாய், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கிரிக்கெட் விளையாட சென்றிருக்கிறார் என்று கூறினார். ஆனாலும் இந்த நாள் வரை ஜடேஜா எந்தவிதமான தீய பழக்கத்திற்கும் அடிமையாகவில்லை என்றும், அவர் தனது பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
12 ஆண்டுகளாக தனது கணவர் வீட்டை விட்டு வெளியே இருக்கிறார் என்றும் அவரால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்றும் தெரிவித்த ஜடேஜாவின் மனைவி மேலும் பேசுகையில் தான் என்ன செய்ய வேண்டும், தனது கடமை என்ன என்பதை ஜடேஜா புரிந்துகொள்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால், ஜடேஜாவுடன் இருக்கும் சக வீரர்களின் குடும்பத்தினர் எந்தக் கட்டுப்பாடும் விதிக்காததால் அவர்கள் தீய பழக்கவழக்கங்களுக்கு ஆளாவதாகவும் ரிவாபா குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கையில் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் நமது கலாச்சாரத்தை மறக்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார். இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தொடர்பான ரிவாபா ஜடேஜாவின் இந்த பேச்சு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
December 12, 2025 10:00 PM IST


