Last Updated:
இன்று தீபாவளி பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இன்று தீபாவளி பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “140 கோடி இந்தியர்களின் கடின உழைப்பையும், படைப்பாற்றலை சுயசார்பு உற்பத்தியையும் கொண்டாடுவோம். இந்தியப் பொருட்களை வாங்குவதை உறுதி செய்யுங்கள், நீங்கள் வாங்கியதை சமூக ஊடகங்களில் பகிருங்கள்.” என தெரிவித்துள்ளார்.
அதேபோல் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “இருளின் மீது ஒளியின் வெற்றி, தீமையின் மீது நீதியின் வெற்றி, அறியாமையின் மீது ஞானத்தின் வெற்றியை கொண்டாடுவதே தீபாவளி.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “துன்பங்கள் கரைந்து, ஒளிமயமான எதிர்காலம் பிறக்கட்டும். வேற்றுமை அகன்று, ஒற்றுமை ஓங்கட்டும். அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும்.” என தெரிவித்துள்ளார். அதேபோல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
October 20, 2025 7:09 AM IST


