Last Updated:
அயோத்தியில் தீபாவளி தீப உற்சவத்தில் கின்னஸ் சாதனைக்காக நடத்தப்பட்ட பிரமாண்ட நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர்.
அயோத்தியில் தீபாவளியை முன்னிட்டு நடந்த தீப உற்சவ நிகழ்ச்சியில் கின்னஸ் சாதனை முயற்சியாக 26 லட்சத்து 11 ஆயிரம் விளக்குகளை ஏற்றி மக்கள் வழிபாடு நடத்தினர்.
உத்தர பிரதேசத்தில் தீபாவளி பண்டிகை களைகட்டிய நிலையில் அயோத்தி ராமர் கோயில் வண்ண விளக்குகளால் மின்னியது. சரயு நதிக்கரையில் பிரம்மாண்ட லைட் ஷோவுக்கு இடையே நடைபெற்ற ராமலீலா நிகழ்வை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர்.
கின்னஸ் சாதனைக்காக சரயு நதிக்கரையில் 26 லட்சத்து 11 ஆயிரம் விளக்குகளை ஏற்றி மக்கள் வழிபாடு நடத்தினர். உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கொண்டாடப்பட்ட தீப உற்சவ விழாவின்போது வண்ணமயமான வாண வேடிக்கைகள் காட்டப்பட்டன.
#WATCH | Uttar Pradesh: A Ram Leela is being performed at Ram ki Paidi, located on the banks of the River Saryu in Ayodhya, accompanied by a laser and light show. With the Ghat lit up with diyas and colourful lights, #Deepotsav is being celebrated here.
(Source: ANI/UP Govt) pic.twitter.com/RcMxI6tC7j
— ANI (@ANI) October 19, 2025
பட்டாசுகளின் மின்னல் வெளிச்சத்தால் வானமெங்கும் ஒளி வெள்ளமாய்க் காட்சியளித்தது. இடமிருந்து வலமாகவும், கீழிருந்து மேலாகவுமாய் வெடிகளும், வானத்தில் சென்று வெடிக்கும் பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன. தீப உற்சவ நிகழ்ச்சியைக் காண வந்த மக்கள் வாணவேடிக்கையை வீடியோ எடுத்தும், செல்பி எடுத்தும் ரசித்து மகிழ்ந்தனர்.
October 19, 2025 10:18 PM IST