[ad_1]
Last Updated:
தி சேஸ் டீசரில் மாதவன் மற்றும் தோனி இணைந்து நடித்த வீடியோ வெளியானது. இது திரைப்படம் அல்ல, விளம்பரமாக இருக்க வாய்ப்பு உள்ளது. ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகம்.
ரசிகர்களால் அன்பாக தல என்று அழைக்கப்படும் தோனி நடிகர் மாதவனுடன் இணைந்து நடிக்கும் டீசர் வெளியாகியுள்ளது.
பாதுகாப்புப்படை வீரர் போன்ற உடையில் மிரட்டலான தொனியில் கிரிக்கெட் வீரர் தோனி தோன்றுவது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. திரைப்படமா? வலைதள தொடரா? விளம்பரமா? என்ற அறிவிப்பு எதுவும் இடம்பெறவில்லை. வாசன் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள படைப்பின் டீசரை நடிகர் மாதவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘தி சேஸ்’ என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
சிலர் பாலிவுட் படத்தில் தோனி நடிக்கிறார் என்று கூறிவந்தனர். இந்த நிலையில் தான் உண்மையில் தோனி நடிப்பில் வெளிவந்துள்ள வீடியோ திரைப்படம் அல்ல, விளம்பரமாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. எனினும், எந்த விளம்பரம் என்பது தொடர்பான விவரங்களும் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என்று மாதவன் தனது வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அப்போது இது விளம்பரமா அல்லது திரைப்படமா என்பது தெரிந்துவிடும்.
2020ஆம் ஆண்டுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மே 2025 இல் தனது இறுதி ஐபிஎல் போட்டியில் விளையாடிய அவர், கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் கொண்டாடப்படும் கேப்டன்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
இந்தியாவை 2007 டி20 உலகக் கோப்பை, 2011 கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி வெல்ல வைத்தவர். இதற்கிடையே தான் பல விளம்பரங்களில் நடித்துள்ள எம்.எஸ்.தோனி, வெள்ளித் திரையில் தோன்றுகிறாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
September 08, 2025 2:56 PM IST