ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜரிவாலுக்கு எழுதிய கடிதத்தில், ஆம்ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ஆம் ஆத்மியில் இருந்து விலகிய கைலாஷ் விரைவிலேயே பாஜகவில் இணையலாம் என தகவல்கள் தெரியவந்துள்ளன.
தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள நிலையில் ஆம் ஆத்மியில் இருந்து மூத்த தலைவர் கைலாஷ் கெலாட் விலகியிருப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

