• Login
Sunday, October 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

திலீபன் சிலை விவகாரம் : கஜேந்திரனிடம் யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு 3 மணி நேர விசாரணை

GenevaTimes by GenevaTimes
October 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
திலீபன் சிலை விவகாரம் : கஜேந்திரனிடம் யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு 3 மணி நேர விசாரணை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதிய இணைப்பு

தியாக தீபம் திலீபனுக்கு புதிதாக அமைக்கப்பட்ட சிலை சம்பந்தமாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் இன்று காலை முன்னிலையாகியிருந்தார்.

இந்தநிலையில் 3 மணிநேர விசாரணையின் பின்னர் திருவுருவச் சிலை தொடர்பாக வாக்குமூலம் பதிவுசெய்து விட்டு சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

திலீபன் சிலை விவகாரம் : கஜேந்திரனிடம் யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு 3 மணி நேர விசாரணை | Selvarajah Gajendran Summoned By Jaffna Police

மேலதிக தகவல்கள் – த.பிரதீபன் 

முதலாம் இணைப்பு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனுக்கு யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு காவல்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


தியாக தீபம் திலீபனுக்கு புதிதாக அமைக்கப்பட்ட சிலை சம்பந்தமாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று (25) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ் மாவட்டக் குற்றத் தடுப்பு காரியாலயத்திற்கு சமுகமளிக்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இந்த விடயம் தொடர்பில் செல்வராசா கஜேந்திரன் ஐபிசி தமிழுக்கு இன்று காலை தெரிவித்ததாவது, யாழ்ப்பாணம் காவல்துறையினரினால் நேற்றைய தினம் (24) கந்தர்மடத்திலுள்ள எனது வீட்டில் கட்டளை ஒன்று வழங்கப்பட்டிருக்கின்றது.

திலீபனின் திருவுருவச் சிலை 


இன்று ஞாயிற்றுக்கிழமை 25 ஆம் திகதி காலை 10 மணிக்கு காவல்நிலையத்திலே வாக்குமூலம் அளிப்பதற்கு சமுகமளிக்குமாறு கூறப்பட்டிருக்கின்றது.



குறிப்பாக தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலை தொடர்பான விசாரணை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த விடயம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்கு வருமாறு கட்டளை வழங்கப்பட்டுள்ளது.

திலீபன் சிலை விவகாரம் : கஜேந்திரனிடம் யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு 3 மணி நேர விசாரணை | Selvarajah Gajendran Summoned By Jaffna Police


நான் இன்று 10 மணிக்கு அங்கே செல்ல இருக்கின்றேன்.

நேற்று தான் என்னுடைய கைக்கு அந்த கட்டளை கிடைத்தது.

இதற்கு முன்னர் இரண்டு தடவை கரவெட்டியிலுள்ள என்னுடைய தாயாரின் இல்லத்திற்கு கட்டளையை கொண்டு சென்றிருக்கின்றார்கள். மகன் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றார் அவரிடம் சமர்ப்பியுங்கள் என்று என்னுடைய தாயார் அவர்களிடம் சொல்லியிருக்கின்றார்.

வாக்குமூலம் அளிக்கவுள்ளார்

ஆனால் அவர்கள் என்னிடம் கையளிக்காமலேயே வாக்குமூலம் இரண்டு தடவை எனக்கு கட்டளை அனுப்பியும் நான் வரவில்லை என்று எங்களுடைய உறுப்பினரிடம் பொய் சொல்லியிருக்கின்றார்கள்.

திலீபன் சிலை விவகாரம் : கஜேந்திரனிடம் யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு 3 மணி நேர விசாரணை | Selvarajah Gajendran Summoned By Jaffna Police



நேற்றைய தினம் உரிய முறையில் கட்டளை எனக்கு கிடைத்தமையால் இன்று வாக்குமூலம் அளிக்கச் செல்கின்றேன் ” என தெரிவித்தார்.

இதேவேளை குறித்த விசாரணைக்கு சமூகமளிக்க தவறும் பட்சத்தில் அவருக்கு எதிராக இலங்கை தண்டனை சட்டக்கோவை 172ஆம் பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றம் மூலம் அழைப்பாணை பெறப்படும் எனவும் அந்தக் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

செராஸ் காவல் மரணம் குறித்த விசாரணையை குற்றப் புலனாய்வுத் துறை  மேற்கொள்ளுமாறு காலிட் உத்தரவு | Makkal Osai

Next Post

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக தலைமை ஆசிரியர் மீது விசாரணை | Makkal Osai

Next Post
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக தலைமை ஆசிரியர் மீது விசாரணை | Makkal Osai

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக தலைமை ஆசிரியர் மீது விசாரணை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin