• Login
Friday, June 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

திருவாரூரில் சிக்கிய தவெக நிர்வாகி! பஸ் ஸ்டாண்டில் நின்ற இளம்பெண்ணுக்கு.. பாலியல் தொல்லை! | Thiruvarur Bus Stand Incident: TVK Functionary Nabbed by Police Over Sexual Harassment

GenevaTimes by GenevaTimes
June 18, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
திருவாரூரில் சிக்கிய தவெக நிர்வாகி! பஸ் ஸ்டாண்டில் நின்ற இளம்பெண்ணுக்கு.. பாலியல் தொல்லை! | Thiruvarur Bus Stand Incident: TVK Functionary Nabbed by Police Over Sexual Harassment
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Halley Karthik

Time
Updated: Thursday, June 18, 2026, 15:01 [IST]

திருவாரூர்: பஸ் ஸ்டாண்டில் நின்ற இளம்பெண்ணை பாலியல் சீண்டல் செய்ததாக, தவெக நிர்வாகி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இன்று காலை சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக நிர்வாகிகள் குற்றங்களில் ஈடுபடுவதாக விமர்சித்திருந்தார். இதைனயடுத்து ஒரு சில மணி நேரங்களிலேயே தவெகவினர் 2 பேர் கைது செய்யப்பட்டிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இருவரில் ஒருவர் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த ஒன்றிய செயலாளர் ஆவர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

Thiruvarur

என்ன நடந்தது?

நேற்றிரவு திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில், 27 வயது இளம்பெண் ஒருவர் தனது தந்தை வருவதற்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த திருத்துறைப்பூண்டி ஆலத்தம்பாடி அருகே வசித்து வந்த, ஆனந்த் மற்றும் அவருடைய நண்பர் அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த இளம்பெண்ணின் தந்தை, ஆனந்த் மற்றும் அவருடைய நண்பரின் பைக் சாவியை பிடிங்கிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருக்கிறார்.

புகாரின் பேரில் போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்திருக்கின்றனர். இதில் ஆனந்த என்பவர் தவெகவின் திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளராக இருந்திருக்கிறார். இவர் கைது செய்யப்பட்டதையடுத்து, அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் கட்சி தலைமை விடுவித்திருக்கிறது.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

இன்று காலை சட்டமன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக ஆட்சியில் வேலியே பயிரை மேய்கிறது என்றும், தவெக நிர்வாகிகள்தான் அதிக அளவில் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றும் விமர்சித்திருந்தார். இந்நிலையில் தற்போது தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

English summary

Thiruvarur: Two individuals, including a TVK functionary, have been arrested for sexually harassing a young woman at the bus stand. Earlier today, Leader of the Opposition Udhayanidhi Stalin criticized TVK functionaries for engaging in criminal activities. The arrest of two TVK members just hours later has sparked a debate.

Read More

Previous Post

ஏர்ஏசியா நிறுவனம் எச்சரிக்கை – Malaysiakini

Next Post

குறுவை சாகுபடிக்கு ₹4,000 அரசு மானியம்… உழவர் செயலியில் உடனே பதிவு செய்யுங்கள்… | Agriculture News (விவசாய செய்திகள்)

Next Post
குறுவை சாகுபடிக்கு ₹4,000 அரசு மானியம்… உழவர் செயலியில் உடனே பதிவு செய்யுங்கள்… | Agriculture News (விவசாய செய்திகள்)

குறுவை சாகுபடிக்கு ₹4,000 அரசு மானியம்... உழவர் செயலியில் உடனே பதிவு செய்யுங்கள்... | Agriculture News (விவசாய செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin