Last Updated:
டி20 ஃபார் மேட்களில் அதிக ரன்களை குவிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு. அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்
டி20 போட்டிகளில் 79 பந்துகளில் 39 சிக்சர்களுடன் 302 ரன்கள் குவித்து இந்தியாவை சேர்ந்த மோகித் அலாவத் என்ற வீரர் சாதனை படைத்துள்ளார். இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
டெஸ்ட், ஒருநாள் போட்டித் தொடர்களுக்கு பின்னர் டி20 போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மற்ற 2 ஃபார்மேட்களை விடவும் டி20க்கு அதிக வரவேற்பு இருப்பதால் உலகில் பல நாடுகள் டி20 தொடர்களை நடத்துகின்றன.
இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் உலகின் பணக்கார லீக் தொடராக மாறியுள்ளது. இதன் மூலமாக பல திறமை மிக்க வீரர்கள் தேசிய அணிகளில் இடம்பிடிக்கிறார்கள்.
இதேபோன்று இந்தியாவில் பல்வேறு டி20 தொடர்கள் நடத்தப்படுகின்றன. அவைகளில் ப்ரட்ன்ஸ் ப்ரீமியர் லீக் தொடரும் ஒன்று. இந்த தொடர் டெல்லியில் நடத்தப்படுகிறது. இதில் மாவி லெவன் மற்றும ப்ரென்ட்ஸ் லெவன் அணிகள் மோதின.
மாவிலெவன் அணியில் 21 வயதாகும் மோகித் அலாவத் விளையாடினார். 72 பந்துகளை எதிர்கொண்ட இவர் 39 சிக்சர்களுடன் 302 ரன்கள் குவித்தார். 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த மாவி லெவன் அணி 412 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் மாவி லெவன் அணி எளிதாக வென்றது.
இதன்பின்னர் பேட்டி அளித்த மோகித் அலாவத் டி20 ஃபார் மேட்களில் அதிக ரன்களை குவிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு. அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன் என்று தெரிவித்தார்.
June 27, 2025 7:52 PM IST


