இந்தச் சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனை, திருமாவளவன் சந்தித்து நீண்ட நேரம் பேசியிருப்பது பெரும் அரசியல் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது. இதன் மூலம் அதிமுக – விசிக கூட்டணி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்ற அடிப்படையில் அதிமுக கூட்டணியில் தொல்.திருமாவளவன் இணையக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

