Last Updated:
உண்மையில் திருமண ஷாப்பிங் செய்வதற்கு BNPL ஒரு புத்திசாலித்தனமான வழியாக இருக்குமா அல்லது காலப்போக்கில் அது நிர்வகிக்க முடியாத கடன் வலைக்குள் உங்களை மாட்டிவிடுமா என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இந்திய திருமணங்கள் எப்போதும் பிரம்மாண்டமாக அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு நடப்பது வழக்கம். ஆடைகள் முதல் நகைகள் மற்றும் திருமண மண்டபம், போட்டோ என்று இதற்கான செலவுகள் லட்சக்கணக்கில் ஆகலாம். பொருளாதார சுமையைக் குறைப்பதற்காக பல தம்பதியினர் மற்றும் குடும்பங்கள் தற்போது பை நவ் பே லேட்டர் என்ற BNPL ஆப்ஷன்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
உண்மையில் திருமண ஷாப்பிங் செய்வதற்கு BNPL ஒரு புத்திசாலித்தனமான வழியாக இருக்குமா அல்லது காலப்போக்கில் அது நிர்வகிக்க முடியாத கடன் வலைக்குள் உங்களை மாட்டிவிடுமா என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பை நவ் பே லேட்டர் என்பது பின்டெக் நிறுவனங்கள், இ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம்கள் மற்றும் வங்கிகள் வழங்கிவரும் ஒரு குறுகிய கால கடன் வசதியாகும். இதன் மூலம் உங்களுக்கு விருப்பமான பொருட்களை உடனடியாக வாங்கிக் கொண்டு, அதற்கான பேமென்டை அடுத்த சில வாரங்கள் அல்லது மாதங்களில் தவணைகளாக செலுத்தலாம். இந்த தவணைகளை நீங்கள் சரியான நேரத்தில் செலுத்தும்போது, அதற்கு எந்த ஒரு வட்டியும் செலுத்த தேவையில்லை.
பொதுவாக திருமணங்கள் எனும்போது, ஒரு குறுகிய காலகட்டத்திலேயே பல்வேறு விதமான ஷாப்பிங்களை செய்ய வேண்டி இருக்கலாம். இதற்கு BNPL ஒரு சௌகரியமான வழியாக அமைகிறது. அப்ரூவல் மற்றும் குறைந்தபட்ச ஆவணங்களுடன் கடைசி நேர செலவுகளைக்கூட இந்த ஆப்ஷன் கொண்டு உங்களால் சமாளிக்க முடியும்.
BNPL ஆப்ஷன் மூலமாகக் கிடைக்கும் நன்மைகள்:
- விலை அதிகம் உள்ள பொருட்களை கூட முழு பேமெண்ட் செலுத்தாமல் இந்த ஆப்ஷன் மூலமாக உங்களால் வாங்க முடியும்.
- ஒரு சில வங்கிகளும், ஃபின்டெக் நிறுவனங்களும் கடன் தவணைகளை நீங்கள் சரியான நேரத்தில் திருப்பி செலுத்தி விட்டால் வட்டி பணத்தை தளர்த்துகின்றனர்.
- அதே சமயத்தில் பண்டிகை மற்றும் திருமணங்களுக்கு BNPL பிளாட்ஃபார்ம்கள் கேஷ்பேக் அல்லது சலுகைகளையும் வழங்குகின்றன.
BNPL ஒரு சௌகரியமான கடன் ஆப்ஷனாக இருந்தாலும், பொறுப்புடன் கையாளாவிட்டால் மெதுமெதுவாக உங்களை கடன் வலைக்குள் மாட்டிவிடலாம். அளவுக்கு அதிகமாக செலவு செய்வதற்கான வாய்ப்பு இதில் அதிகமாகவே உள்ளது. உங்களுடைய செலவுகளை நீங்கள் சிறிய பேமென்டுகளாக பிரிக்கும்போது, மொத்த பணமும் எங்கு செல்கிறது என்பதை நீங்கள் கண்காணிக்க தவறலாம்.
பேமென்ட்களை நீங்கள் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தாமல்போனால், அது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். மேலும், எதிர்காலத்தில் உங்களுக்கு பர்சனல் லோன் அல்லது கிரெடிட் கார்ட் கிடைப்பதில் சிக்கல்கள் வரலாம். அதேபோல BNPL கடனை நீங்கள் அன்றாட பழக்கமாக மாற்றிக் கொள்ள ஆரம்பிப்பீர்கள். ஆகையால் BNPL என்பது சிறிய, உடனடி ஷாப்பிங் செய்வதற்கு ஏற்றதாக இருந்தாலும், அளவுக்கு அதிகமாக அல்லது திருமணங்கள் போன்ற பெரிய செலவுகளுக்கு பயன்படுத்தும்போது ஆபத்தானதாக மாறலாம்.
November 24, 2025 5:43 PM IST


