Last Updated:
திருமண நிகழ்வை வீடியோவை பதிவு செய்துக்கொண்டிருந்தவர் தனது டிரோன் கேமரா மூலம் மணமகனை தாக்கிய நபரை பின்தொடர்ந்தார்.
மணமகனை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற நபரை திருமணத்தை பதிவு செய்து கொண்டிருந்த டிரோன் கேமரா பின்தொடர்ந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் அமராவதியில சுஜால் ராம் சமுத்ரா என்பவரின் திருமண நிகழ்ச்சி நடந்தது. அப்போது, மணமேடையில் ஏறிய நபர் ஒருவர் மணமகனை கத்தியால் குத்தினார். இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்த நிலையில், திருமண நிகழ்வை வீடியோவை பதிவு செய்துக்கொண்டிருந்தவர் தனது டிரோன் கேமரா மூலம் மணமகனை தாக்கிய நபரை பின்தொடர்ந்தார்.
தாக்குதல் நடத்திய நபர் மற்றொரு நபருடன் வந்திருந்ததும், அவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றதும் டிரோன் கேமரா காட்சியில் பதிவாகி உள்ளது. சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு டிரோன் கேமரா அவர்களை பின்தொடர்ந்துள்ளது.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், தாக்குதல் நடத்தியவரின் பெயர் ரகோ ஜிதேந்திரா பக்ஷி என்பது தெரியவந்தது. திருமண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த DJ பார்ட்டியில், ரகோவை மணமகன் தெரியாமல் இடித்துவிட்டதாகவும் அதனால் தகராறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்து அவர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
November 13, 2025 9:46 AM IST


