Last Updated:
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், டிம்பிளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணை 34 முறை கத்தியால் குத்தி கொலை செய்த நபர், தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்டியாலாவைச் சேர்ந்த 29 வயதான டிம்பிள், மொகாலியில் உள்ள சரக்கு போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் பணியாற்றிய ஹரிந்தர் சிங் மானும், டிம்பிளும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாகத் தெரிகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், டிம்பிளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மொகாலி அலுவலகத்தில் டிம்பிள் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அவரது அறைக்குள் நுழைந்த ஹரிந்தர் சிங், கத்தியால் அவரை சரமாரியாக குத்தினார். தொடர்ந்து, ஹரிந்தர் தனது கழுத்தில் கத்தியால் 10 முறை குத்தி தற்கொலைக்கு முயன்றார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பணியாளர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவப் பரிசோதனையில் டிம்பிள் இறந்துவிட்டது தெரியவந்தது. மேலும், அவருக்கு 34 இடங்களில் கத்திக் குத்துகள் விழுந்ததும் தெரியவந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹரிந்தர் சிகிச்சை பெற்று வருகிறார்.


