அயர்லாந்தின் ஆஃபாலி கவுண்டியில் ஜோசப் க்ரோகன் என்ற 75 வயது பணக்கார நில உரிமையாளர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இவர், லிசா ஃபிளாஹெர்டி (50) என்ற பணிப்பெண்ணை ரகசியாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த ரகசிய திருமணம் நடந்த 24 மணி நேரத்திற்குள் ஜோசப் க்ரோகன் இறந்தார். இதன் மூலம் லிசாவுக்கு ஜோசப்பின் 5.5 மில்லியன் யூரோ (ரூ.47 கோடி) மதிப்புள்ள சொத்து சொந்தமானது.
ஆனால் ஜோசப்பின் திருமணம் மற்றும் மரணம் குறித்து தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என கூறி அவரின் குடும்பத்தினர் லிசாவுக்கு 5.5 மில்லியன் யூரோ சொத்து கிடைக்கக்கூடாது என வழக்கு தொடர்ந்தனர்.
குடும்பத்தினர் லிசாவை, ஜோசப்பின் பணத்தைப் பெறுவதற்காக அவருடன் நெருங்கிய பழக்கம் கொண்ட சூழ்ச்சிகாரியாக சித்தரிக்கின்றனர்.
ஆனால், லிசாவின் நண்பர்கள், இவர்களுக்கு இடையிலான உறவு 1991 ஆம் ஆண்டு லிசாவுக்கு 16 வயதாக இருந்தபோது தொடங்கியது என்றும், அவர் லிசாவின் வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாக இருந்தார் என்றும் கூறுகின்றனர். ஜோசப், லிசாவின் மூன்று குழந்தைகளுக்கும் ஒரு தந்தை பிம்பமாக இருந்தார் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே ஜோசப் க்ரோகனின் மரணத்திற்கு புற்றுநோய் மற்றும் சிகிச்சையுடன் தொடர்புடைய தொற்றுதான் காரணம் என்று தடயவியல் நிபுணர்கள் உறுதி செய்தனர்.
ஜோசப்பின் பெயரைப் பயன்படுத்தவும், அவரது பண்ணையை எடுத்துக்கொள்ளவும் லிசாவுக்கு முழு உரிமை உண்டு என்று அவரது நண்பர்கள் வாதிடுகின்றனர்.