• Login
Monday, May 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

திருமணமான 14 மாதங்களில் இளம் பெண் தற்கொலை… போலீஸ் விசாரணையில் பகீர் தகவல் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 18, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
திருமணமான 14 மாதங்களில் இளம் பெண் தற்கொலை… போலீஸ் விசாரணையில் பகீர் தகவல் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 18, 2026 10:17 PM IST

வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் இளம்பெண் வீட்டு மொட்டை மாடியில் இருந்து குதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

News18
News18

உத்தர பிரதேச மாநிலம் நொய்டா அருகே ஜல்பூரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹிருத்திக். இவருக்கு பாதல்பூரை பகுதியைச் சேர்ந்த 24 வயதான தீபிகா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

கடந்த 14 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற திருமணத்தின் போது பெண் சார்பாக, மாப்பிள்ளை வீட்டார் கேட்ட அத்தனையும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் பணம் மற்றும் பொருட்களை வாங்கிய போதும் அவர்களின் பேராசை குறைந்தபாடில்லை.

இதனால் திருமணமான சில மாதங்களிலேயே கணவன் ஹிருத்திக் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதலாக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து நச்சரித்ததுடன் இளம்பெண்ணை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

ஏற்கனவே சக்திக்கு மேலாக வரதட்சணை கொடுத்ததால் மேற்கொண்டு பெற்றோரை தொந்தரவு செய்ய தீபிகாவுக்கு மனம் வரவில்லை. எனவே கணவர் வீட்டில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை பெற்றோரிடம் சொல்லாமல் மூடி மறைத்துள்ளார். இதனால் கணவரும், அவரது குடும்பத்தினரும் இளம்பெண்ணை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

ஒரு கட்டத்திற்கு மேல் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பெண் விபரீத முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த நிலையில் இரவில் வீட்டு மொட்டை மாடிக்கு சென்றவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இளம்பெண் தீபிகாவின் கை, கால், முகம் உள்ளிட்ட இடங்களில் அடித்து துன்புறுத்தியதற்கான காயங்கள் இருந்துள்ளன. இது தொடர்பாக பெண்ணின் தந்தை போலீசில் எழுத்துபூர்வமாக புகார் அளித்துள்ளார்.

அதில், வரதட்சணை கொடுமைப்படுத்தி தனது மகளை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டியுள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீபிகாவின் கணவர் ஹிருத்திக், மாமனார் மனோஜ் ஆகிய இருவரை கைது செய்தனர். கடந்த 12 ஆம் தேதி மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் வரதட்சணைக் கொடுமையால் 33 வயதான இளம்பெண் திவிஷா சர்மா தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் இருந்து மீள்வதற்குள் நொய்டாவில் 24 வயதான பெண் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

First Published :

May 18, 2026 10:17 PM IST

Read More

Previous Post

கண்ணீர் மழையில் நனைந்த முள்ளிவாய்க்கால் முற்றம்

Next Post

செனாய்-டேசாரு விரைவுச்சாலையில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி | Makkal Osai

Next Post
செனாய்-டேசாரு விரைவுச்சாலையில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி | Makkal Osai

செனாய்-டேசாரு விரைவுச்சாலையில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin