மலேசியப் பெண்களை மணந்து மூன்று வருடங்கள் சமூக வருகை அனுமதிச் சீட்டைக் கொண்ட வெளிநாட்டு கணவர்களுக்கு நிரந்தர வதிவிட விண்ணப்பங்களை (பிஆர்) கிடைக்கச் செய்வதன் மூலம் இருநாட்டு குடும்பங்களை ஆதரிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன. மலேசியர்களை மணந்த வெளிநாட்டு வாழ்க்கைத் துணைவர்களுக்கான புதிய நிரந்தர வசிப்பிட விண்ணப்ப வழிகாட்டுதல்கள், குடியுரிமை இல்லாத கணவர்களைக் கொண்ட மலேசியப் பெண்களை ஓரங்கட்டுவதாக அரசு சாரா இயக்கம் தெரிவித்துள்ளது. பாலின அடிப்படையிலான வேறுபாடு அவர்கள் மீது தேவையற்ற நிதி சுமையை உருவாக்குவதோடு மேலும் பலர் ஒரே வருமானம் ஈட்டும் நிலைக்கு தள்ளப்படுவார்கள என்று அது கூறியது.
அவர்களின் கணவர்கள் – பெரும்பாலும் தகுதிவாய்ந்த நிபுணர்கள் நிரந்தர வசிப்பிட பெறும் வரை வேலைவாய்ப்பைப் பெறுவதில் தடைகளை எதிர்கொள்கின்றனர். மார்ச் 3 அன்று, துணை உள்துறை அமைச்சர் ஷம்சுல் அனுவார் நசாரா, நிரந்தர வசிப்பிடத் தகுதியை பெறுவதற்கான நுழைவு அனுமதிகளுக்கான விண்ணப்ப செயல்முறைக்கான புதிய வழிகாட்டுதல்கள் செப்டம்பர் 1 முதல் செயல்படுத்தப்படும் என்று கூறினார். மலேசிய குடிமக்களின் வெளிநாட்டு மனைவிகள் தகுதி பெற குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் திருமணமாகி ஒரு வருடத்திற்கு சமூக வருகை அனுமதிச் சீட்டை வைத்திருக்க வேண்டும் என்றார் குடியுரிமை இல்லாத வாழ்க்கைத் துணைவர்கள் நிரந்தர வசிப்பிடத் தகுதி பெறாவிட்டால், மருத்துவம், மருந்தகம், நிதி, சட்டம் மற்றும் பிற உரிமம் பெற்ற துறைகள் உள்ளிட்ட சில தொழில்களில் இருந்து தடைசெய்யப்பட்டுள்ளனர் என்றும் அது தெரிவித்தது.