Last Updated:
நொய்டாவில் நூருல்லா ஹைதர் தனது மனைவி அஸ்மா கானை சந்தேகத்தின் பேரில் சுத்தியால் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டாவில் மனைவி மீது சந்தேகப்பட்டு சுத்தியால் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் நூருல்லா ஹைதர் (55) என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது மனைவியின் பெயர் அஸ்மா கான் (42). கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற இவர்களுக்கு தற்போது பொறியியல் படிக்கும் ஒரு மகனும், 8ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர்.
பிகாரை சேர்ந்த நூருல்லா ஹைதர், பொறியியல் படித்துள்ளார். ஆனால் கடந்த சில நாட்களாக இவருக்கு வேலை இல்லை எனக் கூறப்படுகிறது. மனைவி அஸ்மா கானும் பொறியியல் படிப்பிலேயே பட்டம் பெற்று நொய்டாவில் பணிபுரிந்து வந்தார்.
இதற்கிடையே, கடந்த சில நாட்களாக, அஸ்மா கானுக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக நூருல்லா ஹைதர் சண்டை போட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று வாக்குவாதம் முற்றிய நிலையில், நூருல்லா ஹைதர் சுத்தியை வைத்து தன் மனைவியின் தலையில் அடித்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: ராஷி கண்ணா ஃபிட்னஸுக்காக இவ்வளவு உழைக்கிறாங்களா..? அழகின் ரகசியம் இதுதான்..!
இதுகுறித்து அவர்களது மகன் தான் போலீசாருக்கு தகவல் கொடுத்ததாகவும், இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு உடற்கூறாய்விற்கு அனுப்பியுள்ளதாக காவல் துணை ஆணையர் ரம்பதன் சிங் தெரிவித்தார்.
”அவர்களின் மகள் இதுகுறித்து காலை தெரிவித்தார். கடந்த சில நாட்களாகவே அவர்கள் இருவரும் சண்டை போட்டு வந்தனர். ஆனால் நூருல்லா ஹைதர் இப்படி செய்வார் என எதிர்பார்க்கவில்லை” என அஸ்மா கானின் மைத்துனர் தெரிவித்துள்ளார்.
April 05, 2025 2:08 PM IST


