• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

திருமணத்தை மீறிய உறவு.. கண்டுபிடித்த மகளுக்கு தந்தை செய்த கொடூரம்.. ஆந்திராவில் அதிர்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 28, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
திருமணத்தை மீறிய உறவு.. கண்டுபிடித்த மகளுக்கு தந்தை செய்த கொடூரம்.. ஆந்திராவில் அதிர்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 28, 2026 1:51 PM IST

ஆந்திர மார்க்காபுரம் திரிபுராந்தகம் கிராமத்தில் சிவா ரெட்டி கள்ளக்காதலி பாஜூபீ உடன் சேர்ந்து ஒன்பது வயது துளசி வந்தனாவை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி.

சிவா ரெட்டியை போலீசார் கைது செய்து அழைத்து செல்கின்றனர் .(அடுத்த படம் ஏஐ).
சிவா ரெட்டியை போலீசார் கைது செய்து அழைத்து செல்கின்றனர் .(அடுத்த படம் ஏஐ).

தந்தையின் கள்ளக்காதலை கண்டுபிடித்த ஒன்பது வயது மகளை தூக்கிச் சென்று கள்ளக்காதலி வீட்டில் வைத்து கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் மார்க்காபுரம் மாவட்டம் திரிபுராந்தகம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா ரெட்டி. இவருக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் பாஜூபீ என்ற பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதனிடையே, தந்தையின் கள்ளத்தொடர்பை அவருடைய ஒன்பது வயது மகள் துளசி வந்தனா கண்டுபிடித்துள்ளார். மேலும் தன்னுடைய கள்ளத்தொடர்பு விவகாரம் மகளுக்கு தெரியும் என்பதை சிவா ரெட்டியும் அறிந்திருந்தார்.

எனவே மகள் தன்னுடைய கள்ளத் தொடர்பு விவகாரத்தை மனைவி ஈஸ்வரம்மாவிடம் போட்டுக் கொடுத்து விடுவாரோ என்று சிவா ரெட்டி அஞ்சியுள்ளார். இதனால் மகளை கொலை செய்து கள்ளத்தொடர்பை யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் தொடர முடிவு செய்தார். மேலும் இதற்கான திட்டத்தை சிவா ரெட்டி, பாஜுபீ ஆகியோர் வகுத்துள்ளனர்.

இந்நிலையில் தன்னுடைய தாத்தா அருகே படுத்து தூங்கிக் கொண்டிருந்த மகளை இரவு நேரத்தில் கள்ளக்காதலி வீட்டுக்கு சிவா ரெட்டி தூக்கி சென்றார். அங்கு வைத்து துளசி வந்தனா வாயில் துணியை திணித்து சத்தம் போட முடியாத வகையில் தடுத்து கழுத்தை வயரால் இறுக்கி இரண்டு பேரும் துளசி வந்தனாவை கொலை செய்தனர்.

இதனைத்தொடர்ந்து வீட்டை பூட்டிக்கொண்டு பாஜூபீ வெளியே சென்று விட்டார். சிவா ரெட்டி ஏதும் அறியாதவர் போல் வீட்டுக்கு வந்து விட்டார். இதனைத்தொடர்ந்து இரவு தாத்தா அருகே படுத்து தூங்கிக் கொண்டிருந்த துளசி வந்தனா காணாமல்போன தகவல் கிராமம் முழுவதும் பரவி துளசி வந்தனாவை தீவிரமாக தேட துவங்கினர்.

அப்போது பாஜூபி வீடு பூட்டி இருப்பதை பார்த்த கிராமத்தினர் வீட்டின் பூட்டை உடைத்து சோதனை செய்தபோது அங்கு துளசி வந்தனா உடல் இருப்பது தெரியவந்தது. இது பற்றி போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவல் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி, சிவாரெட்டி, துளசி வந்தனா ஆகியோரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிவாரெட்டியை கிராம பெண்கள், பொது மக்கள் ஆகியோர் வீட்டிலிருந்து காவல் நிலையம் வரை செருப்பால் அடித்துக் கொண்டே இழுத்து சென்றது குறிப்பிடத்தக்கது. பிரேத பரிசோதனைக்காக மார்க்காபுரம் அரசு மருத்துவமனைக்கு துளசி வந்தனா உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தந்தையின் கள்ளக்காதலை கண்டுபிடித்த ஒன்பது வயது மகளை தூக்கிச் சென்று கள்ளக்காதலி வீட்டில் வைத்து கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More

Previous Post

Tamilmirror Online || 4 லீற்றர் பெற்ரோல்: 21 நாள் சிறைத்தண்டனை

Next Post

டிஜிட்டல் பைரஸி கும்பல் மீது நடவடிக்கை எடுத்த ஜியோ ஸ்டார்.. ஐபிஎல் போட்டி தொடங்கும் நாளில் அதிரடி!! | வணிகச் செய்திகள்

Next Post
டிஜிட்டல் பைரஸி கும்பல் மீது நடவடிக்கை எடுத்த ஜியோ ஸ்டார்.. ஐபிஎல் போட்டி தொடங்கும் நாளில் அதிரடி!! | வணிகச் செய்திகள்

டிஜிட்டல் பைரஸி கும்பல் மீது நடவடிக்கை எடுத்த ஜியோ ஸ்டார்.. ஐபிஎல் போட்டி தொடங்கும் நாளில் அதிரடி!! | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin