• Login
Tuesday, June 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

திருமணத்துக்கு முந்தைய போட்டோ-ஷூட்.. பிரபல தொழிலதிபரின் மகனுக்கு வருங்கால மனைவி செய்த கொடூரம்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 23, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
திருமணத்துக்கு முந்தைய போட்டோ-ஷூட்.. பிரபல தொழிலதிபரின் மகனுக்கு வருங்கால மனைவி செய்த கொடூரம்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 23, 2026 10:01 PM IST

தொழிலதிபரின் மகனுக்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.

சியா கோயல் - சேத்தன் சவுத்ரி
சியா கோயல் – சேத்தன் சவுத்ரி

மகாராஷ்டிராவில் பிரபல தொழிலதிபரின் மகன் 350 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த வழக்கில் அவரின் வருங்கால மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிராவை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் விஷால் அகர்வால் என்பவரின் மகன் கேதன் அர்வால். இவருக்கு சியா கோயல் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தொழிலதிபரின் மகனுக்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற இருந்தது. திருமண நிகழ்ச்சிக்காக ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற அரண்மனையை 17 கோடி ரூபாய்க்கு புக் செய்துள்ளனர். விருந்தினர்கள் வந்து செல்வதற்கு இரண்டு சொகுசு விமானங்கள் தயார் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், மணப்பெண் சியா கடந்த 19 ஆம் தேதி தான் தனது 20 ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இதையொட்டி தனது வருங்கால மனைவியுடன் திருமணத்துக்கு முந்தையை போட்டோ-ஷூட் நடத்த கேதன் அகர்வால் முடிவு செய்துள்ளார். இதற்காக புனேயில் உள்ள புகழ்பெற்ற லோகட் கோட்டைக்கு சென்றுள்ளார். அங்கு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக நண்பர்களுக்காக சொகுசு விடுதியில் 40 அறைகளை புக் செய்துள்ளார். அதற்கு முந்தைய நாள் லோகட் கோட்டைக்கு இருவர் மட்டும் தனியாக சென்றுள்ளனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக 350 அடி பள்ளத்தில் தவறி விழுந்து சேதன் அகர்வால் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் அளித்த சாட்சியங்கள் இளம்பெண்ணுக்கு எதிராக அமைந்துள்ளன. உடனே சியா கோயலை பிடித்து விசாரித்துள்ளனர். அத்துடன், அவரின் செல்போன் உரையாடல்கள், சமூகவலைதள பதிவுகள், தொழில்நுட்ப சான்றுகள் அனைத்தையும் போலீசார் அலசி ஆராய்ந்துள்ளனர்.

அதன்படி, இரண்டு முறை அவரை திட்டமிட்டு கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டுள்ளனர். அதில் இருந்து கேதன் அகர்வால் தப்பிய நிலையில், கடந்த 18 ஆம் தேதி லோகட் கோட்டைக்கு இருவரும் சென்றுள்ளனர். அப்போது அங்கு தனது காதலன் சேத்தன் சௌத்ரியை இளம்பெண் வரவழைத்துள்ளார். பின்னர், இருவரும் கூட்டுச் சேர்ந்து வருங்கால கணவனை பள்ளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளனர்.

இதையடுத்து தங்களுக்கு இருந்த தடை நீங்கிவிட்டதாக நினைத்து எதுவும் நடக்காதது போன்று உலாவியுள்ளனர். ஆனால், போலீசாரின் புலன் விசாரணை மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் மூலம் இருவரும் வசமாக சிக்கியுள்ளனர். தொடர்ந்து காதலர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், இந்த சதிச் செயலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தொழிலதிபரின் மகனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் 350 அடி பள்ளத்தில் தள்ளி அவரை கொலை செய்துவிட்டு விபத்து நாடகம் போட்ட வருங்கால மனைவி, தனது காதலனுடன் கைது செய்யப்பட்டது மகாராஷ்டிராவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

திருமணத்துக்கு முந்தைய போட்டோ-ஷூட்.. பிரபல தொழிலதிபரின் மகனுக்கு வருங்கால மனைவி செய்த கொடூரம்.. என்ன நடந்தது?

Read More

Previous Post

டொலர்களில் எண்ணெய் வர்த்தகம் செய்ய ஈரானுக்கு அமெரிக்கா அனுமதி!

Next Post

வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் எட்டு பேர் காயம் | Makkal Osai

Next Post
வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் எட்டு பேர் காயம் | Makkal Osai

வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் எட்டு பேர் காயம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin