Last Updated:
திருப்பதி மலையில் உள்ள பள்ளத்தாக்கில் குதித்தவரை தேடிப் பார்த்தும் கிடைக்காததால் திரும்பி வந்தனர். திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள அக்கக்கார் கோவில் அருகே சுமார் நூறு அடி ஆழமுள்ள கிடு கிடு பள்ளத்தாக்கில் திடீரென்று பக்தர் ஒருவர் குதித்துள்ளார். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகும் அவர் கிடைக்காததால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.

திருப்பதியில் இருந்து திருமலைக்கு வாகனங்கள் செல்ல பயன்படுத்தும் பாதையில் அக்கார் கோவில் (கன்னிமார்) உள்ளது. சுமார் 100 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கின் மேல் அமைந்திருக்கும் அந்த கோவில் அருகே மொட்டை போட்ட நிலையில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் அந்த வழியாக திருப்பதி மலைக்கு நடந்து வந்து கொண்டிருந்த பக்தர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தடுப்பு சுவர் மீது ஏறி சிறுத்தைகள் நடமாட்டம் மிகுந்த பள்ளத்தாக்கில் குதித்து விட்டார் என்று தேவஸ்தான விஜிலன்ஸ் துறைக்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்தனர்.
இதனை தொடர்ந்து அங்கு தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர்,போலீசார், தீயணைப்பு படையினர் ஆகியோர் விரைந்து வந்து கயிறு மூலம் பள்ளத்தாக்கில் இறங்கி அந்த நபரை தீவிரமாக தேடினர். சுமார் இரண்டு மணி நேரம் தேடியும் அங்கு யாரும் இல்லாத காரணத்தால் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் திரும்பி வந்துவிட்டனர். தற்போது தொலைபேசி மூலம் தகவல் அளித்தவரை தேடி கண்டுபிடிக்கும் பணி நடைபெறுகிறது.
March 05, 2025 8:21 PM IST