அதன்படி, கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த பக்தர்களுக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெள்ளிக்கிழமை சிறப்பு தரிசன ஏற்பாடு செய்யப்பட்டது.
முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு உறுதியளித்தபடி, திருமலை – திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் முக்கோடி ஏகாதசி அன்று வைகுண்ட துவார தரிசனத்தை ஏற்பாடு செய்து வைத்தனர். பின்னர், பக்தர்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் சிறப்பு வாகனங்களை ஏற்பாடு செய்தது.
காயமடைந்த 32 பக்தர்கள் ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் கழகத்திலிருந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பட்டுள்ளதாகவும் திருப்பதி மாவட்ட ஆட்சியர் எஸ்.வெங்கடேஸ்வர் தெரிவித்துள்ளார்.

