• Login
Monday, June 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

திருப்பதி கோயிலில் அதிர்ச்சி சம்பவம்… கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உட்பட 6 பேர் பலி

GenevaTimes by GenevaTimes
January 8, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
திருப்பதி கோயிலில் அதிர்ச்சி சம்பவம்… கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உட்பட 6 பேர் பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 08, 2025 10:29 PM IST

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உட்பட 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News18

திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெளி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் வருடாந்திர உற்சவங்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது வைகுண்ட ஏகாதசி விழாவாகும். மார்கழி மாதத்தில் நடைபெறும் இவ்விழா தொடர்ந்து 10 நாட்கள் நடத்தப்படும். இந்த 10 நாட்களும் வைகுண்ட துவாரம் எனப்படும் சொர்க்கவாசல் திறந்திருக்கும். அதன் வழியாக சென்று ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

அதன்படி ஜனவரி 10 முதல் 19 ஆம் தேதி வரை திருப்பதியில் சொர்க்கவாசல் திறக்கப்படும். 2024ம் ஆண்டில் வைகுண்ட ஏகாதசி கிடையாது. மாறாக 2025ம் ஆண்டில் வருடத்தின் துவக்கம் மற்றும் இறுதி என இரண்டு வைகுண்ட ஏகாதசிகள் வர உள்ளன. 2025ம் ஆண்டின் ஜனவரி 10ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது.

இந்நிலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய தேவையான இலவச தரிசன டோக்கன் வாங்க திருப்பதியில் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சேலத்தை சேர்ந்த மல்லிகா என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக பலியானார். இதேபோல் மேலும் 3 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகினர். இதையடுத்து கூட்ட நெரிசலில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த நெரிசலில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் திருப்பதி பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் கூட்ட நெரிசலில் காயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Location :

Tirupati,Chittoor,Andhra Pradesh

First Published :

January 08, 2025 9:41 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

திருப்பதி கோயிலில் அதிர்ச்சி சம்பவம்… கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உட்பட 6 பேர் பலி – 10 பேர் காயம்!

Read More

Previous Post

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

Next Post

சீனப் பள்ளிக் கூடங்களை வாடகைக்கு எடுக்கும் நிகழ்வுகளில் முரண்பாடான மது விதிகள் – Malaysiakini

Next Post
சீனப் பள்ளிக் கூடங்களை வாடகைக்கு எடுக்கும் நிகழ்வுகளில் முரண்பாடான மது விதிகள் – Malaysiakini

சீனப் பள்ளிக் கூடங்களை வாடகைக்கு எடுக்கும் நிகழ்வுகளில் முரண்பாடான மது விதிகள் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin