Last Updated:
செய்யக்கூடாத ஒரு தவறைச் செய்ததை உணர்ந்து, முழு மனதுடன் சுவாமிக்கு சொத்தை எழுதிக் கொடுத்ததாக ரவிக்குமார் கூறியுள்ளார்.
திருப்பதி உண்டியல் காணிக்கையில் பணத்தைத் திருடியது உண்மைதான் என்று தேவஸ்தான முன்னாள் ஊழியர் ரவிக்குமார் ஒப்புக்கொண்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் காணிக்கை பணத்தை கணக்கிடும் இடத்தில் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வந்த ரவிக்குமார், சுமார் 100 கோடி ரூபாய் திருட்டில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இந்த நிலையில், தனது தவறை முழுமையாக உணர்ந்துவிட்டதாக ரவிக்குமார் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.
செய்யக்கூடாத ஒரு தவறைச் செய்ததை உணர்ந்து, முழு மனதுடன் சுவாமிக்கு சொத்தை எழுதிக் கொடுத்ததாக ரவிக்குமார் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் வேறு சிலருக்கு தாம் பணம் கொடுத்ததாகவும், பணத்தைத் திருட அறுவை சிகிச்சை செய்ததாகவும் கூறப்படுவது தவறான தகவல் என்றும் ரவிக்குமார் விளக்கம் தந்துள்ளார்.
Tirupati,Chittoor,Andhra Pradesh
December 07, 2025 1:26 PM IST
“திருப்பதி உண்டியல் காணிக்கையை திருடியது உண்மைதான்..” தேவஸ்தான முன்னாள் ஊழியர் ரவிக்குமார் ஒப்புதல்!


