Last Updated:
Tirupati heart attack | திருப்பதி மலையில் மாரடைப்பு ஏற்பட்ட பக்தரை சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய போலீஸ் காண்ஸ்டபிள் குர்ரப்பாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அந்த வகையில் கடந்த 15ஆம் தேதி குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்த நபர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டம் மாமிடி பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 61 வயது முதியவர் சீனிவாசலு. இவர் கடந்த 15ஆம் தேதி குடும்பத்துடன் ஏழுமலையானை வழிபட்ட அவர் லட்டு பிரசாதம் வாங்கிய பின் திருப்பதி மலை உள்ள மாட வீதி வழியாக சென்று கொண்டிருந்தார். மேற்கு மாட வீதியில் ஓர் இடத்தில் அவர்கள் குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தபோது திடீரென்று சீனிவாசலுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி சரிந்தார்.
அப்போது அந்த பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த திருமலை இரண்டாவது நகர காவல் நிலைய போலீஸ் காண்ஸ்டபிள் குர்ரப்பா அவருக்கு சிபிஆர் சிகிச்சை அளித்தார். இதனால் மாரடைப்பிலிருந்து மீண்ட சீனிவாசலுவை திருப்பதியில் மலையில் உள்ள தேவஸ்தானத்தின் அஸ்வினி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெடிக்கல் சைன்சஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சீனிவாசலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் டாக்டர்கள் அவரை இன்று டிஸ்சார்ஜ் செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். ஆந்திராவில் பணியாற்றும் போலீசார் அனைவருக்கும் சிபிஆர் சிகிச்சை அளிக்கும் பயிற்சி போலீஸ் துறையால் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சமயோகிதமாக செயல்பட்டு சிபிஆர் சிகிச்சை அளித்து பக்தரின் உயிரை காப்பாற்றிய போலீஸ்காண்ஸ்டபில் குர்ரப்பாவிற்கு பாராட்டுக்கள் கூறுகின்றன.
August 17, 2025 11:01 AM IST
திருப்பதியில் பக்தருக்கு மாரடைப்பு.. மாடவீதியில் மயங்கி விழுந்த நபரை ஓடி சென்று காப்பாற்றிய போலீஸ்!


