Last Updated:
Tirupati cheetah | திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறுத்தை தாக்க முயன்ற காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை பார்த்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் மலைப்பகுதியில் இருப்பதால் அவ்வபோது, சிறுத்தை உலாவி வருகிறது. சிறுத்தையின் பிடியில் சிக்கி உயிரிழப்புகளும் நேர்ந்து வருகிறது. திருப்பதி மலை அடிவாரத்தில் ஜூ பார்க் சாலையில் இருசக்கர வாகனத்தில் இருவர் பயணித்தனர். அவர்களை சாலையோரத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை அவர்கள் மீது பாய்ந்து தாக்க முற்பட்டது.
அவர்கள் வேகமாக சென்று கொண்டிருந்ததால் சிறுத்தையின் பாய்ச்சலில் இருந்து நொடி பொழுதில் தப்பினர். எனினும், பின்னால் அமர்ந்திருந்தவர் சிறுத்தையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சிறுத்தை தாக்க முற்பட்ட காட்சி, பின்புறத்தில் வந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி உள்ளது. இதனால் திருப்பதி மலை அடி வாரம் முதல் மலை வரை மிகவும் எச்சரிக்கையுடன் மக்கள் பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகவே பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
July 27, 2025 8:26 AM IST