திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை, திருப்பதிக்கு தனி மாநில அந்தஸ்து கோரி புதிதாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு ஒன்றை உச்சநீதிமன்றம் இன்று(நவ. 8) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சமூக ஆர்வலர் கே.ஏ.பால் என்பவர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ‘மனுதாரரின் கோரிக்கையை செயல்படுத்தினால் அனைத்து கோயில்கள், குருத்வாராக்களுக்கு தனி மாநிலங்களை உருவாக்க வேண்டும். குறிப்பிட்ட மதத்திற்கென தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்று எங்களால் கூற முடியாது’ என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும் இந்த விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

