சாங்கி விமான நிலையத்தில் திருடிவிட்டு சிங்கப்பூரை விட்டு வெளியேறிய இந்தியர் மீண்டும் சிங்கப்பூர் வரும்போது கையும்களவுமாக பிடிபட்டார்.
ஜுவல் சாங்கி விமான நிலையத்திலும், சாங்கி விமான நிலைய முனையங்களின் ட்ரான்சிட் பகுதியிலும் அமைந்துள்ள 14 கடைகளில் சுமார் S$5,136 மதிப்புள்ள பொருட்களை அவர் திருடியதாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் ஆமைகளை கொண்டுவந்த தமிழ்நாட்டை சேர்ந்தவர்: சிங்கப்பூர் Nparks கூறுவதென்ன?
இந்தியர் மீண்டும் சிங்கப்பூர் வரும்போது சிக்கினார்
இந்நிலையில், நாட்டை விட்டு வெளியேறிய அவர் மீண்டும் கடந்த ஜூன் 1 ஆம் தேதி சிங்கப்பூர் திரும்பியபோது பிடிபட்டார்.
விமான நிலைய காவல் பிரிவின் அதிகாரிகள் அவரை கைது செய்தனர், அவரிடம் இருந்து கணக்கில் வராத பல பொருட்களை போலீசார் கண்டுபிடித்ததாக கூறியுள்ளனர்.
நீதிமன்றத்தில் நிறுத்தப்படும்
நாளை (ஜூலை 25) அவர் மீது நீதிமன்றத்தில் 13 திருட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்றும், இதற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், மோசடி செய்ததாக மற்றொரு குற்றச்சாட்டையும் அவர் எதிர்கொள்வார், இதற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
பெண்ணின் வாழ்க்கையை நாசப் படுத்திய இரு வெளிநாட்டவர்கள் – குற்றவாளிகள் என தீர்ப்பு!
சிங்கப்பூரை விட்டு வெளியேறினார்
கடந்த மே 29 அன்று மாலை 4:28 மணியளவில் ஆடவர் தொடர்புடைய கடைத் திருட்டு குறித்து காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
அதாவது, ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் அமைந்துள்ள கடையிலிருந்து பை காணாமல் போனதாக புகார் சொன்னவர் தெரிவித்தார்.
பின்னர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர், அப்போது குற்றம் சாட்டப்பட்ட இந்தியர் பொருளை எடுத்துக்கொண்டு பணம் செலுத்தாமல் கடையை விட்டு வெளியேறுவது தெரிந்தது.
அப்போது அவர் நாட்டை விட்டு வெளியேறியதால், காவல்துறையால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
சிங்கப்பூர் திரும்பியபோது பிடிபட்டார்
ஜூன் 1 ஆம் தேதி, குற்றம் சாட்டப்பட்ட இந்தியர், சாங்கி விமான நிலையத்தில் ட்ரான்சிட் பகுதியில் இருந்தபோது விமான நிலைய காவல் பிரிவின் அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
பின்னர் அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்ததில், கணக்கில் வராத பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
திருடப்பட்டதாக சொல்லப்படும் பொருட்களில் வாசனை திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் பைகள் உள்ளிட்டவை அடங்கும், அதன் மொத்த மதிப்பு S$5,136 ஆகும்.
அனைத்தும் அவரிடம் இருந்து மீட்கப்பட்டன.
வேலையிட காயம்… ஊழியர் நாடகமாடியதாக கூறிய முதலாளி மரணம் – களமிறங்கிய MOM & போலீஸ்
Photo: Singapore Police Force