செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்பிக்க முயன்றவர்களை பேருந்து ஓட்டுநர் ஒருவர் சாதுர்யமாக பிடிக்க முயற்சித்த காட்சிகள், சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் செயின் பறிப்பு சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. இத்தகைய குற்றங்களை செய்யும் குற்றவாளிகள் பெரும்பாலும் இருசக்கர வாகனங்களைத் தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். செயினை பறித்துக் கொண்டு, இருசக்கர வாகனங்களில் ஏறி கண்ணிமைக்கும் நேரங்களில் திருடர்கள் எளிதாக தப்பி விடுகின்றனர். ஆனால், எல்லா நேரங்களிலும் அவ்வாறு அவர்கள் தப்பிவிடுவதில்லை. அப்படி ஒரு சம்பவம் தான், ஹரியானாவில் நடைபெற்றுள்ளது.
சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வரும் வீடியோ ஒன்றில், செயின் பறிப்பு கொள்ளையர்களை பேருந்து ஓட்டுநர் முடக்கிய பரபரப்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த வீடியோவில், செயின் பறிப்பு திருடர் ஒருவர், இருசக்கர வாகனத்தை தயார் நிலையில் வைத்திருக்கும் சூழலில், சில அடி தூரத்தில் இருக்கும் கடையில் நின்றிருந்த மற்றொருவர் செயினை பறித்துக் கொண்டு வந்து, இருசக்கர வாகனத்தில் ஏறுகிறார்.
இதையும் படிங்க : பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் பலி : குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்!
அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த பேருந்து ஒன்று, திருடர்களின் இருசக்கர வாகனம் மீது மோதியதில், இருவரும் கீழே விழுந்ததும், இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் செல்கின்றனர். பேருந்து ஓட்டுநர் முயற்சி தோல்வி அடைந்தாலும், திருடர்களை பிடிக்க அவர் செய்த முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதன்பின்னர், தப்பியோடிய திருடர்கள் சிக்கினார்களா? இல்லையா? என்பது தெரியவில்லை என்றாலும், அவர்கள் திருடுவதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் சிக்கியதால், அதை வைத்து காவல்துறையினர் பிடித்து விடுவார்கள் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
