திருடச்சென்ற வீட்டில் ஏசி போட்டு ஒய்யாரமாக தூங்கிய திருடனை காவலர்கள் எழுப்பி கைது செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் இந்திரா நகரில் வசித்து வருபவர் மருத்துவர் சுனில் பாண்டே, ஞாயிற்றுக்கிழமை அவர் பணி நிமித்தமாக வாரணாசி வரை சென்றிருந்தார்.
அப்போது மதுபோதையில், வாயில் கதவு கம்பியை உடைத்து, மருத்துவர் வீட்டுக்குள் திருடன் ஒருவன் நுழைந்தான். அசதியாக இருந்ததால், திருடச் சென்ற இடத்தில் ஏசி போட்டு அந்த திருடன் அயர்ந்து தூங்கிவிட்டார்.
இதையும் படிங்க:
நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் வெங்கடேஷ் ஐயர்… ரசிகர்கள் வாழ்த்து!
இந்த நிலையில் வீடு திறந்திருப்பதாக அண்டை வீட்டார் அளித்த தகவலை அடுத்து காவலர்களுக்கு, மருத்துவர் புகார் அளித்தார்.
புகாரை அடுத்து மருத்துவரின் வீட்டுக்குச் சென்ற காவலர்கள், ஏசி போட்டு சவுகர்யமாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த திருடனை எழுப்பி கைது செய்தனர்.
காவலர்கள் நடத்திய விசாரணையில் திருடச் சென்ற நபரின் பெயர் கபில் என்பது தெரியவந்துள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
