Last Updated:
திருச்சூர் ரயில் நிலைய இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து, 500 வாகனங்கள் சேதம், ரயில் என்ஜின் பாதுகாப்பாக அகற்றப்பட்டது.
கேரளாவின் திருச்சூர் ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
திருச்சூர் ரயில் நிலையத்தில் இரண்டாவது நடைமேடைக்கு அருகே இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகனங்களில் பற்றிய தீ மளமளவென பரவியது. பெட்ரோல் டாங்குகளும் வெடித்ததால், வானை நோக்கி கரும்புகை பரவியதுடன், பல கிலோமீட்டர் தொலைவுக்கு தெரிந்தது.
தகவலறிந்து விரைந்துவந்த தீயணைப்புப் படையினர் போராடி தீயை அணைத்தனர். எனினும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த சுமார் 500 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
கேரள மாநிலம் திரிச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து – சுமார் 400 இருசக்கர வாகனங்கள் சேதம் எனத் தகவல் இரண்டாவது நடைமேடைக்கு அருகில் உள்ள வாகன பார்க்கிங் பகுதியில் தீ விபத்து #Thrissur #Fire #news18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/G86mLcOWGq
— News18 Tamil Nadu (@News18TamilNadu) January 4, 2026
வாகன நிறுத்துமிடம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ரயில் என்ஜினிலும் தீப்பற்றியது. உடனடியாக ரயில் என்ஜின் அங்கிருந்து அகற்றப்பட்டது. வாகன நிறுத்துமிடத்தில் இருந்த ஊழியர்கள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.
ரயிலின் மின்சார கம்பியிலிருந்து மின்சாரம் கசிந்து தீவிபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிது. எனினும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீவிபத்தால் ரயில் சேவையில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
Jan 04, 2026 11:54 AM IST


