காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் தனிச் செயலர் பி. பி. மாதவன் காலமானார். 73 வயதான மாதவன் மாரடைப்பால் திங்கள்கிழமை(டிச. 16) தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து காங்கிரஸ் பொதுச்செயலர்கள் பிரியங்கா காந்தியும் கே. சி. வேணுகோபாலும் நேரில் கேட்டறிந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாதவன் திங்கள்கிழமை(டிச. 16) காலமானார்.
இதையடுத்து, மாதவனின் உடல் அவரது சொந்த ஊரான கேரளத்தின் திருச்சூருக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று(டிச. 17) அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தார். கேரளத்தின் திருச்சூர் நகரத்துக்கு இன்று வருகை தந்த ராகுல் காந்தி மறைந்த மாதவன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மக்களவையில் இன்று ’ஒரே நாடு, ஒரே தேர்தல்’ அமல்படுத்துவதற்கான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்ட உள்ள நிலையில், ராகுல் காந்தி திருச்சூரிலிருந்து மீண்டும் தில்லிக்கு உடனடியாகப் புறப்பட்டுச் சென்றதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

&w=1200&resize=1200,675&ssl=1)