திருச்சி – சிங்கப்பூர் இடையே வாரம்தோறும் கூடுதலாக 4 விமான சேவைகளை இண்டிகோ (IndiGo) நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.
அடுத்த மாதம் நவம்பர் 16 முதல் இந்த கூடுதல் சேவைகள் நடப்புக்கு வரும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
அந்த கூடுதல் விமானங்கள் ஞாயிறு, திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும்.
தற்போது திருச்சி – சிங்கப்பூர் இடையே 7 விமானங்கள் இயக்கப்படுகின்றன, கூடுதலாக இந்த 4 விமானங்கள் சேர்த்து இனி வாரத்திற்கு 11 விமான சேவைகளை அது வழங்கவுள்ளது.

சிங்கப்பூரிலிருந்து காலை 6.10 க்கு புறப்படும் விமானம் காலை 7.45 க்கு திருச்சியை வந்தடையும்.
அதே போல, திருச்சியிலிருந்து காலை 10.05 க்கு புறப்படும் விமானம் மாலை 4.40 க்கு சிங்கப்பூரை வந்தடையும்.
சுமார் 14 ஆண்டுகளாக சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் இண்டிகோ விமானம் கூடுதல் சேவைகளை வழங்கியது வெளிநாட்டு ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் சோதனை… 4 ஊழியர்கள் கைது
TOTO: சிங்கப்பூர் லாட்டரியில் தலா 28 கோடியை தட்டி தூக்கிய 3 பேர்!

