திருகோணமலை திருக்கோணேஸ்வரம் கோயில் வளாகத்திலும்
அதனைச் சுற்றியுள்ள கோட்டைப் பகுதியிலும் உலா வரும் அழகிய புள்ளிமான்கள்,
அப்பகுதிக்கு வரும் பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் பெரிதும் கவர்ந்து
வருகின்றன.
எனினும், சில வேலையில் அங்குள்ள பொருப்பற்ற உணவுகளை உட்கொள்வதனால்
மான் இனங்கள் பாதிக்கப்படலாம்.
இப்பகுதிக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்
மான்களைக் கண்டு மகிழ்கின்றனர்.
மான் இனங்கள்
ஆனாலும் இளநீர் கோம்பையை உட்கொள்வதனால் இங்கு
பாதிப்பு ஏற்படலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இளநீர் வியாபாரி குறித்த இளநீர்
கோம்பையை பொறுப்பற்ற முறையில் சேகரிப்பதனால் மான் இனங்கள் உட்கொள்ளக்கூடிய
வாய்ப்பு காணப்படுகிறது.
இயற்கை உணவுகளைத் தவிர்த்து மனிதர்கள் கொடுக்கும் இத்தகைய உணவுகளையும்,
வீசப்படும் கழிவுகளையும் உட்கொள்வதால், மான்களின் செரிமான மண்டலம்
பாதிக்கப்பட்டுப் பல மான்கள் உயிரிழக்கும் அபாயம் தொடர்கிறது.
பாதுகாப்பான இடைவெளி
இது குறித்து உரிய திணைக்களம் இது தொடர்பில் விழிப்புணர்வகளை வழங்க
வேண்டியுள்ளது.
திருக்கோணேஸ்வரத் தளத்தின் இயற்கை அழகிற்கும்
தனித்துவத்திற்கும் முக்கிய அங்கமாகத் திகழும் இந்த மான்களைப் பாதுகாப்பது நம்
அனைவரினதும் தலையாய கடமையாகும்.

மான்களைக் கவரும் அதேவேளையில், அவற்றுக்குத் தொந்தரவு தராத வகையில்
பாதுகாப்பான இடைவெளியைப் பேண வேண்டும்.
வரலாற்றுப் பெருமைமிக்க கோணேஸ்வரம் தலத்தையும், அங்கு வாழும் உயிரினங்களையும்
பாதுகாத்து எதிர்காலச் சந்ததியினருக்குக் கையளிப்பது ஒவ்வொரு பக்தரினதும்
சுற்றுலாப் பயணியினதும் பொறுப்பாகும் என்பதே எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |







