Courtesy: Buharys Mohamed
திருகோணமலையில் சட்டவிரோதமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது.
பத்து பரல் டீசல் இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (23-03-2026) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்ட, சேருநுவர காவல் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் காவல்துறையினர் டீசலைக் கைப்பற்றியுள்ளனர்.
இரகசியத் தகவல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கந்தளாய் பிராந்திய காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கல்லாறு பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது டீசல் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதப் பயன்பாடு அல்லது பதுக்கல் நோக்கில் இவை சேமித்து வைக்கப்பட்டிருந்ததா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட டீசல் பரல்களையும் மூதூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தக் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைச் சேருநுவர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
