சபரீசன்-செந்தாமரையின் அறிக்கை
சபரீசன் மற்றும் செந்தாமரை கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “சமத்துவம், உள்ளடக்கிய வளர்ச்சி, மற்றும் கண்ணியம் ஆகியவை உலகளாவிய உரையாடல்களை மறுவடிவமைக்கும் இந்தக் காலத்தில், தமிழ்நாடு மாற்றத்தை ஏற்படுத்தும் பொதுக் கொள்கைகளுக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளது. இந்த நிதியுதவி, இலட்சக்கணக்கான மக்களுக்கு அதிகாரமளித்த திராவிட இயக்கத்தின் பங்களிப்பை அங்கீகரிப்பதோடு, அதன் கதை உலகளாவிய கல்வி மற்றும் கொள்கை உரையாடல்களில் இடம்பெறுவதை உறுதி செய்யும். திராவிட அனுபவம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகிற்கும் மதிப்புமிக்க பாடங்களை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று தெரிவித்தனர்.

